போர் தொழில் விமர்சனம்

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக்செல்வன், நிகிலா விமல், மாரிமுத்து, பி.எல்.தேனப்பன், ‘நிழல்கள்” ரவி மகேந்திரன், ஒ.ஏ.கே.சுந்தர், ராம் குமார், சந்தோஷ் கீழட்டூர், ஜான் சபாஸ்டியன், சுனில் சுகடா, முத்துச்செல்வன், ஹரிஷ் குமார், கென்னடி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் போர் தொழில்.

திருச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் கொலை நடக்கிறது. அதன் விசாரணை அதிகாரியாக சரத்குமார் நியமிக்கப்படுகிறார். அவருக்கு உதவியாளராக வருகிறார் அசோக் செல்வன். தொடர் கொலையில் சிறுபிழை கூட செய்யாமல் நேர்த்தியாக முடிக்கும் சீரியல் கில்லரின் மர்ம முடிச்சுகளை இவர்கள் எவ்வாறு அவிழ்க்கிறார்கள் என்பதுதான் போர் தொழில் படத்தோட கதை.

சரத்குமார் மூத்த காவல் அதிகாரியாக எதார்த்தமாக சிறப்பாக ஜநடித்து இருக்கிறார். அசோக் செல்வன், சரத்குமார் காம்போ சூப்பர் தேர்வு.

ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது. வசனங்களும் சிறப்பாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் “ போர்தொழில் ஆகச்சிறந்த திகில் திரை படைப்புகளில் ஒன்று “