விமானம் விமர்சனம்

சமுத்திரக்கனி, மாஸ்டர் துருவன், ராகுல் ராமகிருஷ்ணா, அனுசுயா, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் விமானம்.

ஜீ ஸ்டுடியோஸ் – கிரண் கொரப்பட்டி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை சிவ ப்ரசாத் யானலா இயக்கியுள்ளார்.

சென்னை குடிசைப்பகுதிகளில் கட்டணக் கழிப்பறையை நடத்தி அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்பவர் மாற்றுத்திறனாளி சமுத்திரக்கனி. விமானத்தில் பயணிக்க வேண்டும், பைலட் ஆக வேண்டும் என்ற தன் மகனின் ஆசையை நிறைவேற்ற சமுத்திரக்கனி எந்த எல்லை வரை செல்கிறார், அதற்காக அவர் கொடுக்கும் விலை என்ன என்பதே படத்தோட கதை.

பாசக்கார ஏழை அப்பாவாக சமுத்திரக்கனி நடிப்பில் அசத்தியிருக்கார். கட்டணக் கழிப்பிடத் தொழிலை நேர்மையாக செய்வது, வாகனத்தில் மகனை அழகாக கூட்டி செல்வது என ஏழை தந்தைகளை திரையில் பிரதிபலித்திருக்கிறார்.

அப்பாவின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வதிலும், விமானத்தை பார்த்து ரசிக்கும் இடங்களில் கவர்கிறார் மாஸ்டர் துருவன்.

கௌரவக் கதாபாத்திரத்தில் மீரா ஜாஸ்மின் அழகாக வந்து செல்கிறார்.