5E கிரியேசன்ஸ் சார்பில் சுஜன் சாமுவேல் ராய், ஹரிஷ் முத்தால செட்டி மற்றும் சமீர் அமர்தீன் ஆகியோர் தயாரிப்பில் ‘நம்பர் 1 புரொடக்சன்’ ஆக உருவாகி வரும் இந்தப்படத்தின் டைட்டிலை வெகு விரைவில் வெளியிட உள்ளனர்.
சிறுவர்களை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் சமீபத்தில் வெளியான வாரிசு படத்தில் நடித்த இயற்கை புகழ் நடிகர் ஷாம் நடிக்க உள்ளார். சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் கேப்டன் விஜயகாந்த் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்த கண்ணுபட போகுதய்யா என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய எம்.பாரதி கணேஷ் இந்த படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.
இசைஞானி இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவை எம்.எஸ்.பிரபு கவனிக்க, படத்தொகுப்பை நாகூர் ராமச்சந்திரன் மேற்கொள்கிறார்.
இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் ராதாரவி, சந்தானபாரதி, திரு குமரன் (மகாலட்சுமி பெண்கள் கல்லூரி MD), அஜய் (ஜமீலா A.K), ஆஷிகா யாஷ் (Dada) பெங்களூரு ஈஸ்வரி அம்மா, ஜாஸ்பர், மணிரத்னம், மானஸ்வி கொட்டாச்சி, விஷ்வநாதன் பிரபாகரன், ஆவடி லயன் செந்தில் அரசு, ஷிவானி ஹரிகுமார், ராக்ஸ்டார் கமலேஷ், ஆர்வன் வெற்றி இளங்கோ, முகுந்தன் மற்றும் நிஜய் என்ற திண்டுக்கல் நஷிர் ஆகியோர் நடிக்கின்றனர்.
இன்றைய 5G ஜெனேரேஷன் காலகட்டத்தில் இருக்கும் குழந்தைகளின் மனநிலை, அறிவு, ஆற்றல் செயல்பாடுகள் மற்றும் இன்றைய சமூக சூழ்நிலைகள், வாழ்வியலின் பார்வை பற்றிய உணர்வுப்பூர்வமான கருத்தினை விளக்கும் ஒரு பதிவாக சென்னை சிட்டியில் நடக்கும் ஒரு நல்ல கதையம்சத்துடன் இந்தப்படம் தயாராகி வருகிறது.
வரும் ஜூன்-2ஆம் தேதி இசைஞானியின் 80வது பிறந்தநாளன்று இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது..
*தயாரிப்பாளர்* ; சுஜன் சாமுவேல் ராய், ஹரிஷ் முத்தால செட்டி, சமீர் அமர்தீன்
*இணை தயாரிப்பு* ; சிட்டி கிளப் இராஜேந்திரன். S.S.அன்பு தெட்சிணாமூர்த்தி
*தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்*
இசை ; இசைஞானி இளையராஜா
ஒளிப்பதிவு ; எம்.எஸ்.பிரபு DF Tech
படத்தொகுப்பு ; நாகூர் ராமச்சந்திரன் DF Tech
மக்கள் தொடர்பு ; A.ஜான்
இணை இயக்குனர் ; V.ராமச்சந்திரன்
இணை இயக்குனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ; பவித்ரா தேவராஜன் BE
தயாரிப்பு மேற்பார்வை ; A.V.பழனிச்சாமி
கதை திரைக்கதை, வசனம், இயக்கம் ; எம். பாரதி கணேஷ் MA, DFTech