செவிலியர்களின் உன்னதப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை மனிதச் சங்கிலி பேரணியை நடத்தி கவுரவித்தனர்

~சர்வதேச செவிலியர் தினம் மே 12 அன்று கொண்டாடப்படுகிறது ~

சென்னை, 12 மே 2023: அடையாறில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் செவிலியர் பிரிவு இன்று சர்வதேச செவிலியர் தினத்தை கொண்டாடும் வகையில் மனிதச் சங்கிலியை உருவாக்கி, அக்கறை, அர்ப்பணிப்பு, ஈடுபாடு, இரக்கம் மற்றும் கருணையுடன் தங்கள் பொறுப்புகளை முறையாகச் செய்ய எப்போதும் முன்னணியில் இருக்கும் செவிலியர்களுக்கு புகழாரம் செலுத்தியது. மருத்துவமனையின் ஊழியர்கள் மனித சங்கிலி அமைப்பில் ஆர்வத்துடன் பங்கேற்று, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தொடரவும், நல்ல ஆரோக்கியத்தைப் பேணவும் மக்களை ஊக்குவித்தனர். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக போஸ்டர் தயாரித்தல், வினாடி வினா, நடனம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் இயக்குநர் திரு. ஆர் சந்திரசேகர் கூறுகையில், “எங்கள் செவிலியர்கள் எங்கள் உயிர்நாடி, இது கோவிட்-19 தொற்றுநோய் போன்ற சவாலான காலங்களில் நிரூபிக்கப்பட்டடுள்ளது. தங்களுடைய அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, தொழில் ஈடுபாடு, வீரம் மற்றும் சிறந்த செயல்கள் மூலம், செவிலியர்கள் நம் தேசத்திலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொற்றுநோய் காலம் முழுவதும் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர், மேலும் அவர்கள் தினசரியும் அதை செய்கின்றனர். தொற்றுநோய் காலத்தில் செவிலியர்களின் உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்பட்டது, ஆனாலும் அவர்கள் சேவையை கைவிடவில்லை. சுகாதார அமைப்பு மற்றும் சமூகத்திற்கான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக செவிலியர் சமூகத்திற்கு எங்கள் நன்றியைத் தெரிவிக்க இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் விரும்புகிறோம், என்று கூறினார்.”

ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் பற்றி:

ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் – ஒரு IHH ஹெல்த்கேர் பெர்ஹாட் நிறுவனம் – இந்தியாவின் முன்னணி ஒருங்கிணைந்த சுகாதார சேவை வழங்குநராக உள்ளது. இது 27 சுகாதார வசதிகள் (வளர்ச்சியில் உள்ள திட்டங்கள் உட்பட), 4100 செயல்பாட்டு படுக்கைகள் மற்றும் 419 க்கும் மேற்பட்ட நோயறிதல் மையங்கள் (JV கள் உட்பட) கொண்ட நாட்டின் மிகப்பெரிய சுகாதார நிறுவனங்களில் ஒன்றாகும். ஃபோர்டிஸ் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் இலங்கையில் உள்ளது. இந்நிறுவனம் இந்தியாவின் BSE Ltd மற்றும் தேசிய பங்குச் சந்தை (NSE) ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ளது. உலகத் தரம் வாய்ந்த நோயாளி பராமரிப்பு மற்றும் மருத்துவத்தில் சிறந்து விளங்கும் அதன் கலாச்சாரத்தின் மீது கட்டமைக்க, உலகளாவிய முக்கிய மற்றும் தாய் நிறுவனமான IHH உடனான அதன் கூட்டாண்மை மூலம் பலத்தைப் பெறுகிறது. Fortis 23,000 நபர்களைப் பணியமர்த்தியுள்ளது (SRL உட்பட) அவர்கள் உலகின் மிகவும் நம்பகமான சுகாதாரப் பாதுகாப்பு வலையமைப்பாக மாறுவதற்கான அதன் நோக்கத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஃபோர்டிஸ் கிளினிக்குகள் முதல் குவாட்டர்னரி பராமரிப்பு வசதிகள் மற்றும் பலவிதமான துணை சேவைகள் வரையிலான ஒருங்கிணைந்த சுகாதார சேவைகளை வழங்குகிறது.