நடிகர் நடிகைகள் :
நிஷாந்த் ரூசோ, விவேக் பிரசன்னா, காயத்ரி ஐயர், ‘ராட்சசன்’ வினோத் சாகர், அருள் டி. சங்கர், கோடங்கி வடிவேல், மறைந்த நடிகர் ஈ. ராமதாஸ் மற்றும் பலர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பு : லைட்ஸ் ஆன் மீடியா எனும் பட நிறுவனம் சார்பில்; சுரேஷ், சுந்தர கிருஷ்ணா, வெங்கி சந்திரசேகர்
இயக்கம் : தனபாலன் கோவிந்தராஜ்
ஒளிப்பதிவு : அஸ்வின் நோயல்
இசை : ரஞ்சித் உன்னி
எடிட்டர் : நெல்சன் ஆண்டனி
சண்டை : ஒம் பிரகாஷ்
கலை : விவேக் செல்வராஜ்
மக்கள் தொடர்பு : சதீஷ், சதீஷ் குமார், சிவா (ஏய்ம்).
சிறு சிறு திருட்டு வேலை செய்து காவல்துறையில் மாட்டிக் கொள்ளும் பழக்கமுடைய ஆதி(நிஷாந்த்), போலீஸ் நிலையத்தில் விசாரணையில் இருக்கும் போது காட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்று போலிசுக்கு தகவல் வருகிறது.
அந்தக் காட்டிற்கு போக தனக்கு வழி தெரியும் என்று ஆதி சொல்வதால் சப் இன்ஸ்பெக்டர் போஸ் (கோடங்கி வடிவேல்) கூட அழைத்துச் செல்கிறார். காட்டில் கொலை செய்யப்பட்டு இறந்து விட்டதாக கருதப்படும் மாறனை (விவேக் பிரசன்னா) ஆதியுடன் சேர்த்து கைவிலங்கிட்டு பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு போகிறார் சப்-இன்ஸ்பெக்டர் போஸ். இந்நிலையில் மாறன் உயிரோடு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார் ஆதி.
இந்த நேரத்தில் மாறனின் போனிற்கு போன் வர, அதை எடுத்து பேசும் ஆதியிடம் தன் கணவரை காப்பாற்றுமாறும் பத்து லட்சம் பணம் தருவதாகவும் சொல்கிறார். நிறைய பணம் கிடைக்கும் என்பதால் மாறனை காப்பாற்ற முடிவு செய்கிறார் ஆதி. மாறனை தூக்கி கொண்டு காட்டில் ஒடும் போது, மாறனை தேடி போலீஸ் மற்றும் சில ரவுடிகள் துரத்தி வருகின்றனர்.
போலீஸ் இருவரையும் பிடித்ததா? மாறனை கொல்ல ரவுடிகள் எதற்காக மீண்டும் வருகின்றனர்? ஆதி மாறனை காப்பாற்றினாரா? என்பதே “பருந்தாகுது ஊர் குருவி” படத்தின் மீதி கதை.
பருந்தாகுது ஊர் குருவி படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர் குருவி ‘பருந்தாகுது ஊர் குருவி’ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்