சென்னை, மார்ச் 16, 2023: சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி (IESS-X) என்பது இந்தியாவின் உலோகம் மற்றும் உலோகம் சார்ந்த பொறியியல் திறன்களை சர்வதேச அரங்குக்கு எடுத்துச் செல்லும் கண்காட்சி, பத்தாம் ஆண்டை எட்டியுள்ளது. மார்ச் 16,17,18 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன் அவர்கள், சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கி வைத்தார்.
இதன் கருப்பொருள், திறன் பொறியியல் (#ஸ்மார்ட் இஞ்சினியரிங்) என்பதாகும். தமிழ்நாடு அரசாங்கத்தின் எம்.எஸ்.எம்.இ. துறை செயலாளரான திரு. வி. அருண் ராய், இந்திய அரசாங்கத்தின் வர்த்தம் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த இணைச் செயலாளர் திரு. எல். சத்யா ஸ்ரீனிவாஸ் ஆகிய இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கெளரவித்தனர்.
இந்திய மண்ணில் நடைபெறும் மிகப்பெரிய பொறியியல் திருவிழாவாகும் இது. ஏனெனில், இதன் வெற்றியை நிர்ணயிக்கவுள்ள முக்கிய அம்சங்கள் இவைதான்: 14.28 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 23 ஆயிரம் வணிக விசாரணைகள். 9 இருதரப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. 46 ஆயிரம் வணிக தொடர்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில், இந்திய மற்றும் வெளிநட்டு அமைச்சகங்கள், தூதரக குழுக்கள், உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகள், தொழில்நுட்ப தொழில்முனைவோர்கள், வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், அறிவியல் அறிஞர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்து பேசி, தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள இருக்கின்றனர்.
இந்தக் கண்காட்சியில், உலக அளவிலான கொள்முதல் தொடர்பான கருத்தரங்குகள், தொழில்நுட்ப கருத்தரங்குகள், ஜி20 அமர்வுகள், 300 வெளிநாட்டு கொள்முதலாளர்கள், 1500 உலகத் தரம்வாய்ந்த பொருட்களின் விலைப்பட்டியல், 300 கண்காட்சி பங்கேற்பாளர்கள் மற்றும் 10 ஆயிரம் வர்த்தக பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
அனைவரையும் வரவேற்று உரையாற்றிய, இ.இ.பி.சி. இந்தியா தலைவரான அருண் குமார் கரோடியா, “இ.இ.பி.சி இந்தியா பல பத்தாண்டுகளாக, உலகெங்கும் கண்காட்சிகளை நடத்துவதன் மூலம், இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்தியா இஞ்சினியரிங் சோர்சிங் ஷோ என்ற இந்த தனித்துவமான நிகழ்ச்சி, உலக அளவில் இந்தியாவின் மகத்துவத்தை முன்னிறுத்துவதற்கு பயன்படுகிறது. கனடாவை கூட்டு நாடாகக் கொண்டு, 2012 மார்ச் 22இல், மகாராஷ்டிர மாநிலம், பாம்பே கண்காட்சி வளாகத்தில் முதன் கண்காட்சி தொடங்கியது. 220 கண்காட்சி பங்கேற்பாளர், 350 பேராளர்கள், 6200 பார்வையாளர்களோடு தொடங்கிய அந்த நிகழ்ச்சி, 9 ஆண்டுகளைக் கடந்து, தற்போது 2023இல் பத்தாம் ஆண்டை நெருங்கியுள்ளது. இதில், 300 இந்திய கண்காட்சி பங்கேற்பாளர், 400 பேராளர்கள் ஆகியோரோடு, 700 வணிகர்களுக்கிடையே சந்திப்புகள் நடக்கவுள்ளன. மேலும் மூன்று நாட்களில், 12 அறிவுசார் அமர்வுகளில், 75க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் தங்கள் கருத்துகளைச் சொல்லப் போகிறார்கள்.