பூயூட்டி விமர்சனம்

நடிகர் நடிகைகள் :

ரிஷி, கரீனா ஷா, காயா கபூர், ஆதேஷ் பாலா மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

தயாரிப்பு – ஆர்.தீபக் குமார்
இயக்கம் – கோ.ஆனந்த் சிவா
ஒளிப்பதிவு – ஆர்.தீபக் குமார்
இசை – இலக்கியன்
எடிட்டிங் – சங்கர்.கே
மக்கள் தொடர்பு – கிளாமர் சத்யா

நாயகன் ரிஷி, அழகு என்றாலே ஆபத்து என்று அழகான பெண்களை பார்த்தாலே வெறுப்பதோடு மட்டுமல்லாமல், தனது தந்தை ஆசைப்பட்டது போல், மற்றவர்கள் திருமணம் செய்துகொள்ள மறுக்கும் அல்லது ஊனமுற்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்.

இந்த நிலையில் தீ விபத்தில் முகம் பாதிக்கப்பட்ட நாயகி கரீனா ஷாவை பார்த்ததும் அவர் மீது காதல் கொள்ளும் நாயகன் ரிஷி, தன் தந்தை சொன்னது போல ஒரு பெண்ணுடன் தனது வாழ்க்கையை தொடங்க நினைக்கும் நேரத்தில், நாயகி கரீனா ஷா பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது முகத்தை பழையபடி அழகுப்படுத்திக் கொள்கிறார்.

நாயகி அழகாக மாறியதால் எரிச்சலடையும் ரிஷி, பழையபடி நாயகியின் அழகான முகத்தை அலங்கோலமாக்கி அதன் பிறகு அவரை திருமணம் செய்ய முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். அழகு என்றாலே ஆபத்து என்று ரிஷி நினைப்பது ஏன்? ரிஷியின் விபரீதமான முயற்சியால் என்ன நடந்தது? என்பதுதான் ‘பியூட்டி’ படத்தின் மீதிக்கதை கதை.