தக்ஸ் விமர்சனம்

நடிகர் நடிகைகள் :

ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், அப்பனி சரத், முனிஷ்காந்த், அனஸ்வரா ராஜன், பி.எல்.தேனப்பன், அருண் & அரவிந்த் மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

தயாரிப்பு – எச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபூ ஜியோ ஸ்டூடியோஸ்
இயக்கம் – பிருந்தா
ஒளிப்பதிவு – பிரியேஷ் குருசாமி
இசை – சாம். சி. எஸ்
எடிட்டிங் – பிரவீன் ஆண்டனி
நடன இயக்குனர் – பிருந்தா
உடை- மாலினி கார்த்திகேயன்
மக்கள் தொடர்பு: சதீஷ்குமார், சிவா (ஏய்ம்)

பட்டதாரியான சேது (ஹிருது ஹாரூன்) தன் அப்பா இறந்தவுடன் அவர் வேலை செய்த பிரபல ரவுடி அண்ணாச்சியிடம் (தேனப்பன்) அக்கவுண்டன்ட்டாக வேலையில் சேர்கிறான். ஊமைப் பெண்ணாக அனாதை இல்லத்தில் இருக்கும் அனஸ்வர ராஜனை காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான்.

ஆனால் அண்ணாச்சியிடம் வேலை செய்யும் ரவுடி ஒருத்தன் அனஸ்வர ராஜனுக்கு தொல்லை கொடுக்க அதனால் கோபமடையும் சேது, ரவுடியை கொலை செய்து விட்டு தன் நண்பனின் தூண்டுதலால் அண்ணாச்சியின் பணம், சொத்து பத்திரங்களை எடுத்துக் நண்பனிடம் ஒப்படைத்து விட்டு அனஸ்வர ராஜனுடன் கேரளாவிற்கு தப்பித்துச் போகிறான்.

அவர்களை தேடி அண்ணாச்சி அடியாட்களை அனுப்ப சேதுவை பிடித்து வருகின்றனர். சேதுவிடம் இருக்கும் பணத்தையும், பத்திரத்தையும் மீட்க கொலை பழியை போட்டு பத்து ஆண்டுகள் நாகர்கோவில் சிறையில் தள்ளப்படடுகிறான். இந்த சமயத்தில், சிறைவாசிகள் சிலர் காவல்துறையை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சிக்கும் போது, சேது குறுக்கே நுழைந்து அவர்களின் திட்டத்தை முறியடிக்கிறான்.

அதே சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக இருக்கும் துரையும் (பாபி சிம்ஹா) சிறையில் அடைக்கப்படுகிறான் சேது. அதே அறைக்கு சின்ன சின்ன திருட்டு செய்யும் மருதுவும் (முனீஸ்காந்த்) இன்னும் சில கைதிகளும் வந்து சேர்கின்றனர். ஒருபுறம் ஜெயிலர் ஆரோக்கிய தாஸ்ஸின் (ஆர்.கே.சுரேஷ்) நன்மதிப்பும், மறுபுறம் சிறைவாசிகளின் கோபமும் சேர்ந்து சிறையில் நாட்கள் கழிகின்றன. சிறையிலுள்ள தனது அறை நண்பர் துரை (பாபி சிம்ஹா)வின் பிரச்சனையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, தன் மீது காவல் துறையினரின் வைத்துள்ள நல்ல அபிப்பிராயத்தை பயன்படுத்திக்கொண்டு, மருது (முனிஷ்காந்த்) மற்றும் பலர் சிறையிலிருந்து தப்பிக்க ஒரு திட்டம் தீட்டுகிறான் சேது. பல தடைகளை தாண்டி சேது தன் சக சிறைவாசிகளுடன் தப்பித்தாரா? தன் காதலி அனஸ்வரா ராஜனிடம் சேர்த்தாரா? சேதுவை கொல்ல திட்டம் தீட்டும் அண்ணாச்சியிடமிருந்து தப்பித்தாரா? என்பதே தக்ஸ் படத்தின் மீதி கதை.