“பகாசூரன்” பட இயக்குனர் மோகன். G க்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வாழ்த்து

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை தொடர்ந்து இயக்குனர் மோகன்.G தனது ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தற்போது தயாரித்து இயக்கிய ” பகாசூரன் ” படம் கடந்த வெள்ளியன்று ( பிப்ரவரி 17) திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன், நட்டி, ராதாரவி, கே.ராஜன், தாராக்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சாம். CS இசையமைத்திருந்தார்.

இந்த படம் நேற்று தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

இயக்குனர்கள் சங்க தலைவர் R. K. செல்வமணி மற்றும் செயலாளர் R.V. உதயகுமார், பொருளாளர் பேரரசு உட்பட சங்க உறுப்பினர்கள் அனைவரும் பார்த்து ரசித்தனர்.

படத்தின் இயக்குனர் மோகன். G க்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்ததோடு இந்த படத்தை மக்கள் அனைவரும் நிச்சயமாக குடும்பத்தோடு பார்க்க வேண்டிய விழிப்புணர்வு படம் என்று குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகவும் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தனர்.