நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில்,  க்ரைம்-ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது “தக்ஸ்”

HR Pictures சார்பில் ரியா ஷிபு Jio Studios உடன் இணைந்து வழங்கும், நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில்,  க்ரைம்-ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது “தக்ஸ்”. ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 24, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இதனையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்..

இயக்குநர் பிருந்தா பேசுகையில்,
“ஒரு நல்ல படத்தை எடுக்க இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ரியா ஷிபுவுக்கு நன்றி. ஆரம்பத்தில், ஷிபு தமீன்ஸ் அவரது மகன் ஹிருதுவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க முடியுமா என்று கேட்டபோது, எனக்குக் கொஞ்சம் தயக்கமாகச் சந்தேகமாகத் தான் இருந்தது. ஆனால், அவருடைய நடிப்பைப் பார்த்த பிறகு, அவருக்கு ஒரு நல்ல திறமை இருப்பதையும், அவரது கண்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் போலவே சக்தி வாய்ந்தவை என்பதையும் என்னால் உணர முடிந்தது. அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர், அவருக்குச் சிறந்த எதிர்காலம் உள்ளது. இப்படத்தில் மிகச்சிறந்த பாடலையும், அட்டகாசமான பின்னணி இசையையும் தந்த சாம் சிஎஸ்க்கு நன்றி. படத்தின் மிகப்பெரும் பலமாக இருந்த எடிட்டர் பிரவீன் ஆண்டனிக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் பிரியேஷ் படத்திற்கு அற்புதமான விஷுவல்ஸ் கொடுத்துள்ளார். பாபி சிம்ஹா முக்கிய பாத்திரத்தில் நல்ல நடிப்பைத் தந்துள்ளார். ஓய்வு நேரத்தில் கூட அவர் கேரவனுக்குள் நுழைய மாட்டார், மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே தான் எப்போதும் இருப்பார் அவரது ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி. ஆர்.கே. சுரேஷ் சார் மற்றும் முனிஷ்காந்த் இருவரும் படத்திற்கு பெரும் பலமாக இருந்தனர். இந்த நேரத்தில் உதவி இயக்குநர் ராமை நினைத்துக் கொள்கிறேன். அவர் இப்போது எங்களுடன் இல்லை, அவரது உழைப்பு படத்தில் இருக்கிறது. முழு திரைப்படத்தையும் அவருக்காக அர்ப்பணிக்கிறேன். அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசுகையில்,
 “இசை இயக்குநராக, நான் பல திரைப்படங்களில்  பணிபுரிந்துள்ளேன், அந்தப்படங்களின் கதை கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கும், ஆனால் படத்தின் இறுதிப்பதிப்பு பார்க்கும்போது ஏமாற்றமாகிவிடுகிறது. எந்தத் திரையுலகிலும் இது சகஜம் தான், ஆனால் தகஸ் திரைப்படம் இதில் தனித்துவம் வாய்ந்தது. இதன் இறுதிப்பதிப்பு அருமையாக வந்துள்ளது. பிருந்தா மேடம் ஸ்கிரிப்டை விவரித்தபோதே கதை எனக்கு மிகவும் பிடித்தது. இப்போது முழுப்படமாக இன்னும் பிடித்துள்ளது. அவர் இசை மற்றும் பாடல்களில் எந்த தலையீடும் செய்யவில்லை. அதே போல் எந்த சமரசமும் இல்லாமல், தான் சொன்னதைச் சரியாகப் படமாக்கியிருக்கிறார். கதை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இரண்டும் இப்படத்தில் மிக நன்றாக வந்துள்ளது. ஹிருது ஒரு புதுமுகம் போல் தெரியவில்லை. நன்றாக நடித்துள்ளார். அனைத்து நடிகர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ரியா ஷிபுக்கு நன்றி”

நடிகர் முனிஷ்காந்த் பேசுகையில்,

“இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த பிருந்தா மாஸ்டர் மற்றும் தயாரிப்பாளர் ரியா ஷிபுவுக்கு நன்றி. உறுதுணையாக இருந்த பாபி சிம்ஹா சார், தேனப்பன் சார், ஒளிப்பதிவாளர் பிரியேஷ் மற்றும் அனைவருக்கும் நன்றி. ஹிருது இந்தப் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நடிகர் ஹிருது ஹாரூன் பேசுகையில்..
“இந்த வாய்ப்பை வழங்கிய பிருந்தா மேடத்திற்கு நன்றி. படத்தில் வசனங்கள் கம்மியாக உள்ளது, ஆனால் சாம் சிஎஸ் உடைய இசை நிறையப் பேசுகிறது. படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். அனைவரும் இப்படத்தைப் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”

நடிகர்-தயாரிப்பாளர் PL தேனப்பன் பேசியதாவது.,
 “மெல்லிசைப் பாடலைப் படமாக்கப் போகும் போதெல்லாம், உடனடியாக நம் நினைவுக்கு வரும் பெயர் பிருந்தா மாஸ்டர். இன்று ஒரு ஆக்‌ஷன் கலந்த திரில்லர் பட இயக்குநராக அவரைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. இப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று  இறைவனைப் பிரார்த்திக்கிறேன் நன்றி”

ஒளிப்பதிவாளர் பிரியேஷ் பேசுகையில்,
“என்னைப் போன்ற ஒரு புதிய ஒளிப்பதிவாளருக்கு வாய்ப்பளித்த பிருந்தா மாஸ்டருக்கு நன்றி. இந்த சிறந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ரியா ஷிபு, நடிகர்கள்  ஹிருது மற்றும் குழுவில் உள்ள மற்றவர்களுக்கும் நன்றி. பாபி சிம்ஹா சார், முனிஷ்காந்த் சார் மற்றும் அனைத்து படக்குழுவினருக்கும் நன்றி. நான் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்ஸை சந்திப்பது இதுவே முதல் முறை. இந்த படத்திற்கு அவர் மிக அபாரமான இசையை கொடுத்துள்ளார்” இப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.

நடிகை ரம்யா பேசுகையில்,
 “இந்த வாய்ப்பை கொடுத்த கடவுளுக்கும், என் அம்மாவுக்கும், பிருந்தா மாஸ்டருக்கும் நன்றி. என்னை மாடலாக காட்டிய சில விளம்பரங்களுக்கு அவர் தான் நடனம் அமைத்தார். அவர் என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்தது மிகப்பெரும் மகிழ்ச்சி. படம் அட்டகாசமாக வந்துள்ளது, நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்படியான படமாக இது இருக்கும்”.

தயாரிப்பாளர் ரியா ஷிபு பேசுகையில்,
 “இந்த திரைப்படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒட்டு மொத்த டீமும் அபாரமான வேலையைச் செய்திருக்கிறார்கள். தக்ஸ் பெரிய வெற்றியைப் பெறும் எனும் நம்பிக்கை உள்ளது. தயாரிப்பாளர் தேனப்பன் சார் திரையில் பிரமாதப்படுத்தியுள்ளார். பிருந்தா மாஸ்டர் அனைவரையும் ஊக்குவிப்பார். என் அண்ணன் ஹிருது இந்தப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். சாம் சிஎஸ்ஸின் இசை படத்தைப் படத்திற்கு உயிர்ப்பைத் தந்துள்ளது. முனிஷ்காந்த் சார் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர், இந்த படத்தில் அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பிரியேஷ் சார் எனக்கு இன்னொரு இன்ஸ்பிரேஷன். இந்தப் படத்தில் அவர் அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நீங்கள் அனைவரும் இந்தப் படத்தைப் பார்த்து எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ‘தக்ஸ்’ திரைப்படம் பிப்ரவரி 24, 2023 வெளியாகுமெனப் படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர்கள்:
ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன், சரத் அப்பானி மற்றும் பலர்

தொழில் நுட்பக் குழுவினர்:
இயக்கம் : பிருந்தா
தயாரிப்பு : HR  பிக்சர்ஸ் – ரியா ஷிபு
இசை : சாம் CS
ஒளிப்பதிவு : பிரியேஷ் குருசுவாமி
புராஜக்ட் டிசைனர்: ஜோசப் நெல்லிக்கல்
எடிட்டர்: பிரவீன் ஆண்டனி
ஆக்சன்: பியோனிக்ஸ் பிரபு & ராஜசேகர்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: முத்து குருப்பையா
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : பரமேஷ்வர் சுபாஷ்
ஆடை: மாலினி கார்த்திகேயன்
நிர்வாக தயாரிப்பாளர் – யுவராஜ்
இணை இயக்குநர்: ஹரிஹர கிருஷ்ணன் ராமலிங்கம்
டிசைனர்: கபிலன்
மக்கள் தொடர்பு : சதீஷ் குமார் – சிவா (Aim)