பகாசூரன் விமர்சனம்

நடிகர் நடிகைகள் :

செல்வராகவன், நட்டி, ராதாரவி, கே.ராஜன், மன்சூர் அலிகான், தேவதர்சினி, பி.எல்.தேனப்பன், குணாநிதி, ராம்ஸ், சசி லையா, ரிச்சா, கூல் ஜெயந்த், அருணோதயன், குட்டி கோபி மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மோகன்.ஜி.
இசை – சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு – ஃபருக் ஜே பாட்ஷா
எடிட்டிங் – எஸ்.தேவராஜ்
கலை – எஸ்.கே
ஸ்டண்ட் – மிரட்டல் சிவா
நடனம் – ஜானி
தயாரிப்பு மேற்பார்வை – முருகன்
மக்கள் தொடர்பு – மணவை புவன்

இரண்டு விதங்களில் கதை ஆரம்பிக்கிறது.கோயில்களில் சேவை செய்து கொண்டு வாழும் பீமராசு (செல்வராகவன்). கல்லூரி ஆசிரியர், வாட்ச்மேன், கல்லூரி விடுதி வார்டன் ஆகியோரை கொலை செய்து விட்டு தப்பிச் செல்கிறார். ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரி அருண் வர்மன் (நட்டி) க்ரைம் சம்பந்தப்பட்ட வீடியோக்களை வெளியிடும் யூ டியூபர். தன்னோட அண்ணன் மகள் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதை தெரிந்து அதிர்ச்சியாகி அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயல்கிறார். செல்போன் செயலிகளால் பாதிக்கப்பட்டு பாலியியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு மிரட்டப்படும் பல இளம்பெண்கள் இறப்பதை கண்டுபிடிக்கிறார். அதே நேரம் அவர்களின் பெற்றோர் புகார் கொடுக்க தயங்குவதையும் தெரிந்து கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தில் யாராவது புகார் கொடுத்துள்ளார்களா என்பதை விசாரிக்கும் போது பீமராசுப்பற்றி தெரிந்து கொள்கிறார். அவரை தேடி கடலூருக்கு செல்கிறார். அங்கே பீமராசுவின் அப்பா தன் பேத்தி திடீரென்று தற்கொலை செய்து கொண்டதாகவும், அதன் பின் பீமராசு வீட்டை விட்டு சென்று விட்டதாகவும் சொல்கிறார். பீமராசுவின் மகள் ஏன் இறந்தார்? அருண் வர்மன் பீமராசுவை கண்டுபிடித்தாரா?
பீமராசு எதற்காக மூன்று கொலைகள் செய்தார்? கடைசியாக கொலை செய்ய இருக்கும் நபர் யார்? என்பதே பகாசூரன் படத்தின்  மீதிக்கதை.