நடிகரும் தயாரிப்பாளருமான மதுரை டாக்டர். சரவணன் அவர்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். இவ்விழா மதுரையில் நடைபெற்றது.
டாக்டர் சரவணன் சிறந்த மருத்துவர். ஏழைகளுக்கு உதவி செய்யக்கூடியவர் அவர்களுடன் அவருடன் நமது நிர்வாகிகள் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசினார். விழாவில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார் செல்லூர் ராஜு மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோருடன் ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.