நடிகை-நடிகர்கள்:
சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா, வையாபுரி, முருகதாஸ், கதாநந்தி, கலைச்செல்வன் மற்றும் பலர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:
தயாரிப்பு – ஒய் நாட் ஸ்டுடியோஸ் எஸ். சஷிகாந்த்
இயக்கம் – ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்
இசை – கண்ணன் நாராயணன்
பாடல்கள் – யுகபாரதி
ஒளிப்பதிவு – மார்ட்டின் டான்ராஜ்
படத்தொகுப்பு – டேனி சார்லஸ்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
மனைவி வசுந்தரா, மகள் மற்றும் மரண படுக்கையில் இருக்கும் வயதான அப்பாவுடன் வாழ்ந்து வரும் சமுத்திரக்கனி, தனியார் நிறுவனத்தின் காவலாளியாக பணியாற்றி வருகிறார். குறைவான வருமானத்தால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார்.
தந்தையின் மருத்தவ செலவிற்கு கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் சமுத்திரகனிக்கு மனைவி வசுந்தரா தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து குடும்பத்தை நடத்துகிறார்.
இதற்கிடையே, கிராமத்தில் வயதானவர்களை தலைக்கூத்தல் முறையில் கொலை செய்வது போல், படுத்த படுக்கையாக இருக்கும் சமுத்திரக்கனியின் தந்தையையும் கொல்ல சமுத்திரக்கனியின் மனைவி வசுந்தராவும் அவரது குடும்பத்தினரும் சமுத்திரகனியை நிர்பந்திக்கிறார்கள்.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் சமுத்திரக்கனி, தனது தந்தைக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து அவரை காப்பாற்ற நினைப்பதோடு, அதற்காக வீட்டு பத்திரத்தை அடகு வைத்து செலவும் செய்கிறார். இந்த விஷயத்தை தெரிந்துக்கொள்ளும் வசுந்தர, சமுத்திரக்கனியிடம் சண்டைப்போட குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. தனது அப்பாவை காப்பாற்ற துடிக்கும் சமுத்திரக்கணி மனைவியை சமாதானப்படுத்தினாரா? அல்லது மனைவியின் விருப்பப்படி அப்பாவை கொல்ல சம்மதித்தாரா? இல்லையா? என்பதே ‘தலைக்கூத்தல்’ படத்தின் மீதி கதை.