மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ்” நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் இந்திய தேசத்தின் 74வது குடியரசு தின விழா

மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ்” நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் இந்திய தேசத்தின் 74வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு ” 500 அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா மற்றும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள நயகரா ஹோட்டலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள நயகரா ஹோட்டலில் 74 வது குடியரசு தினம் மற்றும் மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் டாட் காம் நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு விழா வை முன்னிட்டு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் மெட்ராஸ் சிட்டி ப்ராபர்டீஸ் டாட் காம் சார்பிலும் 500 அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பள்ளி உபகரணங்களை எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ பரந்தாமன் மற்றும் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. கருணாநிதி. ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழங்கினர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி அவர்கள் மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ்
நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது இவர்கள் நளிந்தவர்களுக்கும் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் ஆண்டு முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார்கள் இதன் ஒரு தொடர்ச்சியாக 500 மாணவ மாணவிகளுக்கு அவர்களுக்கு தேவையான ஸ்கூல் பேக்
நோட்டு புத்தகங்கள் மற்றும் தேவையான உபகாரணங்கள் மற்றும் 1000 பேருக்கு அறுசுவை விருந்தும் வழங்கினார்கள் மாதத்திற்கு இரண்டு முறையும் அல்லது மூன்று முறையும் செய்து கொண்டிருக்கிறார்கள் இது போல் ஆண்டு முழுவதும் வழங்கவும் மென்மேலும் பல நல உதவிகள் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார் உடன் தேசிய நிர்வாக செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.