அயலி விமர்சனம்

வயதுக்கு வந்த பெண்களை சில மாதங்களிலேயே திருமணம் செய்து வைத்துவிட வேண்டும், என்ற கட்டுப்பாடு கொண்ட கிராமம் தான் வீரபண்ணை. இப்படிப்பட்ட கட்டுப்பாடு இருப்பதனால் அந்த கிராமத்தில் எந்த ஒரு பெண்ணும் 9ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இந்த நிலையில் 8ம் வகுப்பு மாணவி அபிநயஸ்ரீ, படித்து டாக்டராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், அவரது ஆசை நிறைவேறாது என்று சக தோழிகள் சொல்கிறார்கள் தனது கிராமத்து பழக்க வழக்கங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை தகர்ந்தெரிந்து தனது இலக்கை நோக்கி முன்னேறுவதில் அபிநயஸ்ரீ அக்கரை காட்டுகிறார்.

அபிநயஸ்ரீ நினைத்தது போல் படித்தாரா? இல்லையா? அபிநயஸ்ரீயின் செயல்பாடுகளினால் அந்த கிராமத்தில் மாற்றம் ஏற்பட்டதா? இல்லையா? என்பதே ‘அயலி’ இணைய தொடரின் கதை

அபிநயஸ்ரீ, தமிழ்ச்செல்வியாக பதிமுன்று வயதிற்கேற்ற தோற்றத்தில் துள்ளித் திரிந்து செல்லும் பள்ளி மாணவியாகவும், அம்மாவிடம் சண்டை போட்டும், அப்பாவிடம் வெகுளித்தனமாக அடம் பிடித்து அழுது காரியத்தை சாதித்து கொண்டும் சிறப்பாக நடித்தள்ளார்.

அனுமோல் அம்மா குருவம்மாளாக, அப்பா தவசியாக அருவி மதன், சத்திவேலாக லிங்கா, திருப்பதியாக சிங்கம்புலி, கணக்கு வாத்தியார் மூர்த்தியாக டிஎஸ்ஆர்.தர்மராஜ், தோழி மைதிலியாக லல்லின், ஈஸ்வரியாக காயத்ரி, செல்வியாக மேலோடி, முருகனாக பிரகதீஷ்வரன், கயல்விழியாக தாரா, சேகராக ஜென்சன், சிறப்பு தோற்றத்தில் இன்ஸ்பெக்டராக லட்சுமி பிரியா சந்திரமௌலி, ஆங்கில வாத்தியாராக ஸ்மிருதி வெங்கட், கலெக்டராக செந்தில்வேல், எம்எல்ஏவாக பகவதிபெருமாள் என்று கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்துள்ளனர்.

நடிகை-நடிகர்கள்:

அபிநயஸ்ரீ, அனுமோல், அருவி மதன், லிங்கா, சிங்கம்புலி, டிஎஸ்ஆர்.தர்மராஜ், லல்லின், காயத்ரி, தாரா, மேலோடி, பிரகதீஷ்வரன், ஜென்சன்,சிறப்பு தோற்றத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி, ஸ்மிருதி வெங்கட், செந்தில்வேல், பகவதிபெருமாள் மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பு – எஸ். குஷ்மாவதி எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ்
இயக்கம் – முத்துக்குமார்
இசை – ரேவா
எடிட்டர் – கணேஷ் சிவா
ஒளிப்பதிவு – ராம்ஜி
மக்கள் தொடர்பு – ஏய்ம் சதீஷ்