கொடைக்கானலில் காளான் போதை பொருட்களை உட்கொண்ட இளைஞர்கள் இளம் பெண்ணை கற்பழித்து கொலை செய்து விடுகிறார்கள். கொலை செய்யப்பட்ட அந்த பெண் ஆவியாக வந்து தன்னை யார் யார் கற்பழித்தார்கள் மற்றும் நாம் யார் யாரால் மோசம் போனோம் என்பதை அறிந்து அத்தனை பேரையும் பழி வாங்கும் பெண்ணின் கதையே இது என்கிறார் இயக்குனர்.
குட் நியூஸ் ஃபிலிம்ஸ் சார்பாக பொன்னேரி ரதி ஜவகர் இப்படத்தை தயாரித்துள்ளார்.
ஏ.பி.ஆர் இயக்கியுள்ளார். பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய
சகோ. ரமேஷ், இளம் காவல்துரை அதிகாரி தோற்றத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். தீப்தி திவான் கதாநாயகியாகவும் நடிக்க ரதி ஜவகர், டி.ஜவஹர் ஞானராஜ், பிரேம பிரியா, ரோஷிலா பாரதிமோகன்,சுரேந்தர் ஹரிஹரன், ஆகியோருடன் வில்லன்களாக சுரேஷ் , ராம் ரஞ்சித்,நந்தகுமார், அஜய் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு –
பிரித்வி ராஜேந்திரன்
இசை- ஏ.கே ராம்ஜி பாடல்கள்-ஆடூர் பாலா நடனம்-சரண் பாஸ்கர் எடிட்டிங்-கௌதம் மூர்த்தி
தயாரிப்பு-
பொன்னேரி ரதி ஜவகர்
கதை திரைக்கதை வசனம் கலை இயக்கம்- ஏ.பி.ஆர்
இதன் படப்பிடிப்பு 45 நாட்களில் ஏற்காடு கொடைக்கானல் போன்ற இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது.
படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளது.
அடி எனக்கு ஒரு ஆசை உன்னோடு பேச…என்ற மெலோடி டூயட் பாடல் அற்புதமாக அமைந்துள்ளது. உன்னோடு வாழனும்னு ஆசை தான் எனக்கு…என்ற பாடலும்… புள்ளி மானே புலியும் இங்கே இரக்கமின்றி இறையாக்கி…என்ற பாடலும் மனதுக்கு இதமாக இருக்கும் என்கிறார் இசையமைப்பாளர்
ஏ.கே.ராம்ஜி.