78 வயது முதியவருக்கு ஹைப்ரிட் எண்டோவீனஸ் சிகிச்சை சென்னை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையில் வெற்றி

சென்னை, 3 டிசம்பர் 2022: சென்னை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையில் டாக்டர் பாலகுமாரின் வழிகாட்டுதலின் கீழ் திரு. நாகராஜன் என்ற 78 வயது முதியவருக்கு சிக்கலான ஹைபிரிட் எண்டோவாஸ்குலர் அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. நோயாளிக்கு தீவிர ரத்தஉறைவுப் பிரச்சினை, இடது காலில் நாள்பட்ட குணமடையாத புண், கணுக்கால் பகுதியில் குறிப்பிடத்தக்க வகையில் மீண்டும்மீண்டும் தாக்கும் தொற்று, வீக்கம், வலி ஆகியவற்றால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு சிக்கலான ஹைபிரிட் எண்டோவாஸ்குலர் அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்பட்ட நிலையில் ஆலோசனைக்காக சென்னை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையை நோயாளி அணுகினார்.

நாள்பட்ட புண்ணுடன் பத்து ஆண்டுகளுக்கு முன் சிரையில் ஏற்பட்ட ஆழமான ரத்தஉறைவும் இவருக்கு உள்ளது. சிரைப் புண்கள் பொதுவாக காலின் கீழ் பகுதியில் ஏற்படுகின்றன. நோயாளியின் வாழ்க்கைத் தரத்தில் கடுமையான பாதிப்பையும் ஏற்படுத்துகினறன. இது உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுத்தும். கால் சிரை புண்கள் தனியாகப் பிரச்சினையை ஏற்படுத்தலாம் அல்லது வேறு பிரச்சினைகளுக்குக் காரணமாகும் சிரை நோய் சார்ந்த அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம். அவை எளிதில் குணமடையாது. 6 வாரங்களுக்கு மேல் நீடிக்கும். சிரையில் ஏற்படும் புண்கள் நோயாளிகளுக்கு உடலை இயக்க முடியாத நிலை, சமூக தனிமைப்படுத்தல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஒருவேளை இணைநோய் நிலைமைகளை நோயாளி கொண்டிருந்தால், உடல்நலத்துக்கு அதிக அபாயத்தை ஏற்படுத்தும்.

சென்னை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் வாஸ்குலர் அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர் பாலகுமார், இந்த நோயாளிக்கு தொடை சிரையில் எண்டோபிளெபெக்டோமி அறுவைசிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தார். மேலும் வாஸ்குலர் அல்ட்ராசவுண்ட் மூலம் சுருக்கப்பட்ட இலியாக் நரம்பில் சிரை ஸ்டென்ட் துல்லியமாக பொருத்தப்பட்டது. அறுவைசிகிச்சைக்கு 3 வாரங்களுக்குப் பிறகு இடது கீழ் மூட்டு புண் குணமானது.
டாக்டர் பாலகுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவர். 400க்கும் மேற்பட்ட எண்டோவெனஸ் அறுவைசிகிச்சைகளை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்துள்ளார். மக்கள்தொகையில் குறைந்தது 25% பேரை சிரை கோளாறுகள் பாதிக்கின்றன. இவற்றின் மீது அதிக கவனம் செலுத்த, சென்னை எம்ஆர்சி நகர் அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையில் உள்ள அப்பல்லோ வெயின் இன்ஸ்டிடியூட் ஒரு ஆய்வை நடத்தியது. இதில் கால் புண்களுக்கு அளிக்கப்படும் ஆரம்பகால சிகிச்சை நோயாளிகளுக்கு சிறந்த விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டது.

வெற்றிகரமான அறுவைசிகிச்சை குறித்து சென்னை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் வாஸ்குலர் சர்ஜனும் மூத்த ஆலோசகருமான டாக்டர் எஸ். பாலகுமார் கூறுகையில், “தீவிர சிரை நோய் 70% கால் புண்களுக்கு காரணமாகிறது. சிரை நோய் அறிகுறிகளை நிவர்த்தி செய்ய ஆரம்பகால சிரை நோய் மதிப்பீடு அவசியம். பெரிய அளவுக்கு உடலைக் கிழிக்கத் தேவையற்ற நுட்பங்களின் கீழ் செய்யப்படும் தற்போதைய சிரை சிகிச்சைகள் பலவீனமானவர்கள், வயதானவர்களுக்கு உறுதியான தீர்வுகளை வழங்குகின்றன. அதே போன்ற காயங்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதில் இவை பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

வெற்றிகரமான இந்த அறுவைசிகிச்சையால் மகிழ்ச்சியடைந்த நோயாளி, “1992இல் இடது காலில் வீக்கம், வலியுடன் பருத்துவிடும் தீவிரமான சிரை ரத்தஉறைவும் (DVT), முழங்காலில் இருந்து கணுக்கால் வரை வெரிகோஸ் வெயினும் எனக்கு இருந்தன. இதற்காக 14 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். சலைன், ஊசி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு 2016இல், அதே காலில் வலி, அரிப்பு உணர்வு ஏற்பட்டது. மேலும் இடது கணுக்கால் நிலையற்று இருப்பதுபோல் உணர்ந்தேன். எப்போதும் கணுக்காலை சொறிந்துகொண்டே இருந்தேன். இது ரத்தம் கசிவதற்கு வழிவகுத்தது. குடும்ப மருத்துவரின் வழிகாட்டுதலில் சென்னை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் வாஸ்குலர் சர்ஜன் டாக்டர் பாலகுமாரிடம் சென்றேன். பலவித பரிசோதனைகளுக்குப் பிறகு எனக்கு வெரிகோஸ் அல்சர் இருப்பதை அவர் கண்டறிந்தார். மருத்துவமனையில் 2 நாட்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு, அறுவைசிகிச்சை செய்துகொண்டு, என் மனைவியுடன் வீட்டிற்குத் திரும்பினேன். அறுவைசிகிச்சைக்குப் பின் காலில் வலி, அரிப்பு அல்லது வீக்கத்தை நான் உணரவில்லை, மேலும் 1 மணிநேரம் நடைபயிற்சி செய்யும் தினசரி வழக்கத்தை ஆரம்பித்தேன், சோர்வாக உணரவில்லை. டாக்டர் பாலகுமாரின் தனிப்பட்ட கவனிப்பு, சிகிச்சை, தொடர் சிகிச்சைக்காகவும், சென்னை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனை வழங்கிய சிறந்த கவனிப்பு, சேவைகளுக்காக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

சென்னை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா
மருத்துவமனை குறித்து
அப்பல்லோ ஸ்பெக்ட்ரா என்பது உலகத் தரம் வாய்ந்த மருத்துவச் சேவைகள் மற்றும் சிறந்த சுகாதார மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்றும் சிறப்பு மருத்துவமனை. பேரியாட்ரிக்ஸ், எலும்பியல், அழகு அறுவைசிகிச்சை, வாஸ்குலர் அறுவைசிகிச்சை, பிசியோதெரபி போன்றவற்றுக்கான நிபுணர்கள் இங்கு இருக்கிறார்கள். பெங்களூரு, சென்னை, டெல்லி, குருகிராம், குவாலியர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், மும்பை, நொய்டா, பாட்னா, புனே ஆகிய 12 நகரங்களில் 17 மையங்கள் உள்ளன. 2,300-க்கும் மேற்பட்ட முன்னணி மருத்துவர்கள் சிறந்த மருத்துவ விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதுடன் 2,50,000 வெற்றிகரமான அறுவைசிகிச்சைகளையும் செய்திருக்கிறார்கள்; அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனைகள் சுகாதார சேவைகளில் தொடர்ந்து புதிய தரநிலைகளை உருவாக்கிவருகிறது. இது எலும்பியல் – முதுகெலும்பு, பொது – லேப்ராஸ்கோபிக் அறுவைசிகிச்சை, காது-மூக்கு-தொண்டை, சிறுநீரகம், சுருள் சிரை நோய், மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், குடல்-இரைப்பை, வலி ​​மேலாண்மை, பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சிகிச்சைகளையும் வழங்குகிறது.