இரண்டு ஊர்களுக்கு இடையே கோவில் நிர்வாகம் யாருக்கு சொந்தம்? என்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால், பல ஆண்டுகள் கோவில் திருவிழா நடக்காமல் இருக்கிறது. பல வருடங்களாக தண்ணீரே இல்லாத ஆற்றை குப்பை கிடங்காக மாற்ற அரசு முடிவு செய்கிறது. தங்களது ஊர் குப்பை கிடங்காக மாறுவதை தடுக்க நினைக்கும் ஊர் பெரியவர்கள், அதற்காக கோவில் திருவிழாவை நடத்த முடிவு செய்கிறார்கள். ஆனால், கோவில் நிர்வாகம் யாருக்கு சொந்தம்? என்பதில் மீண்டும் பிரச்சனை எழ, ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி அதில் எந்த ஊர் வெற்றி பெறுகிறதோ அவர்களுக்கே கோவில் நிர்வாகம் சொந்தம், என்று முடிவு செய்யப்படுகிறது.
ஒரு ஊர் 18 காளைகளை போட்டியில் இறக்க, மற்றொரு ஊரை சேர்ந்த 18 மாடுபிடி வீரர்கள் குறைந்தது 10 காளைகளை அடக்கி விட்டால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று முடிவு செய்கிறார்கள். அதன்படி, வீட்டுக்கு ஒரு வீரர் என்று தேர்வு செய்யும் கிராம மக்கள் வெள்ளைச்சாமி குடும்பத்தை சேர்ந்த வாரிசையும் இந்த போட்டியில் பங்கேற்க வைக்க முடிவு செய்து அவரை தேடி சென்னைக்கு வர, வெள்ளைச்சாமி கிடைத்தாரா? ஜல்லிக்கட்டு போட்டி நடந்ததா? இல்லையா? அந்த ஊருக்கு எத்தகைய நன்மை கிடைத்தது? என்பதுதான் காரி படத்தோட மீதி கதை.
நடிகை-நடிகர்கள்:
சசிகுமார், பார்வதி அருண், ஜேடி சக்கரவர்த்தி, நரேன், பாலாஜி சக்திவேல், நாகி நீடு, பிரேம், சம்யுக்தா, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, ராம்குமார், தேனிமுருகன் மற்றும் பலர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:
தயாரிப்பு : எஸ். லக்ஷ்மன் குமார்
இயக்கம் : ஹேமந்த்
இசை : டி.இமான்
பாடல்கள் : லலித் ஆனந்த்
எடிட்டர் : டி.சிவனந்தீஸ்வரன்
ஒளிப்பதிவு : கணேஷ் சந்திரா
கலை இயக்குனர் : மிலன்
சண்டை : அன்பறிவு
மக்கள் தொடர்பு : ஜான்