பேட்டைக்காளி இணைய தொடர் விமர்சனம்

வெற்றிமாறன் தயாரிப்பில் லா.ராஜ்குமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ் ‛பேட்டைக்காளி’.
சிவகங்கை மாவட்டத்தை மையமாக வைத்து அங்குள்ள கிராமத்தில்
ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துக்கொண்டு காளைகளை அடக்கி தங்களது வீரத்தை காட்டும் இளைஞர்கள் ஒரு பக்கம், யாராலும் அடக்க முடியாத காளைகளை வளர்த்து ஜல்லிக்கட்டில் பெயர் வாங்கும் பெரிய மனிதர்கள் ஒரு பக்கம், என்று ஜல்லிக்கட்டு போட்டியை கெளரவமாகவும், பெருமையாகவும் நினைக்கும் மனிதர்களுக்ளு இடையே நடக்கும் மோதலும், அரசியலும் தான் வெப் சீரிஸ்ன் கதை.

ஒருபுறம் பண்ணையரானா வேலராமூர்த்தியின் காளையை யாராலும் அடக்க முடியாது. அதனால், ஜல்லிக்கட்டு போட்டியில் அவருக்கு தனி மரியாதை கிடைக்கிறது. மறுபுறம் எந்த காளையாக இருந்தாலும் அதை அடக்க கூடிய திறமையான மாடுபிடி வீரரான கலையரசன் மற்றும் அவரது ஊரை சேர்ந்தவர்கள் வேலராமமூர்த்தியின் காளையை அடக்க கூடாது, என்று ஊர் கட்டுப்பாடு விதிக்கிறது. ஆனால், அந்த கட்டுப்பாட்டையும் மீறி கலையரசன், வேலராமமூர்த்தியின் காளையை அடக்கி விடுகிறார். இதனால், மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டு அந்த பிரச்சனையை தொடர்ந்து நடக்கும் பல சம்பவங்களும், பல்வேறு திருப்பங்களும்தான் ‘பேட்டைக்காளி’.

நடிகை-நடிகர்கள்:

கலையரசன், வேலராமமூர்த்தி, கிஷோர், பாலா ஹாசன், ஷீலா ராஜ்குமார் மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பு : வெற்றிமாறன்
இயக்கம் : லா.ராஜ்குமார்
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : வேல்ராஜ்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, ரேகா D’one