ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் மன்னார் தீவுகளுக்கும் இடையே சுண்ணாம்பு கற்களால் ஆன பாலத்தை ராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம் என்று அழைக்கின்றனர். ராவணனால் சிறை வைக்கப்பட்ட சீதையை மீட்கச் சென்ற போது ராமர் கடலை கடந்து செல்வதற்காக இந்த பாலத்தை வானர படையினர் கட்டியதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த பாலத்தை ராமர் பாலம் என்று அழைப்பதோடு, இந்த பாலத்தை இந்துக்கள் புனிதமாக கருதுகின்றனர்.
ராமர் பாலம் இருக்கும் இடத்தில் பாறைகளை தகர்த்து கடலை ஆழப்படுத்தினால் கப்பல் போக்குவரத்தில் புதிய புரட்சி ஏற்படுவதோடு, தமிழகம் கப்பல் போக்குவரத்திலும், துறைமுக தொழிலிலும் வளர்ச்சி பெறும் என்பதால் ‘சேது சமுத்திர திட்டம்’ என்ற பெயரில் இந்த திட்டத்தை செயல்படுத்த பல ஆண்டுகளாக முயற்சி செய்தனர். ஆனால், இது ராமர் கட்டிய பாலம், இது ராமரின் அடையாளம், என்று கூறி பலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் சேது சமுத்திர திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
நாட்டுக்கு வளர்ச்சியை தரக்கூடிய திட்டமாக இருந்தாலும், கடவுளின் பெயரால் தடுத்து நிறுத்தப்பட்ட சேது சமுத்திர திட்டத்திற்கு தடையாக இருக்கும் அந்த சுண்ணாம்புக்கல் பாலத்தை உண்மையிலேயே ராமர் தான் கட்டினாரா? அல்லது அது இயற்கையில் உருவான பாறைகளா? என்பதுதான் ‘ராம் சேது’ படத்தின் கதை.
நடிகை-நடிகர்கள்:
அக்ஷய் குமார், ஜாக்குலின் பெர்னாண்டஸ், நூஷ்ரத் பருக்ஷா, பர்வேஷ் ராணா, சத்யதேவ் காஞ்சார்னா, நாசர் மற்றும் பலர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:
தயாரிப்பு : சுபாஷ் கரன் மகாவீர் ஜெயின் ஆஷிஷ் சிங் & ப்ரைம் வீடியோ
இயக்கம் : அபிஷேக் ஷர்மா
இசை : டேனியல் பி.ஜார்ஜின்
ஒளிப்பதிவு : அஷீம் மிஸ்ரா
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, ரேகா (D’one)