கட்டிட தொழிலாளியான கருணாஸ், மனைவி ரித்விகாவிற்கு பிரசவ வலி ஏற்பட ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார். குழந்தை பிறந்தவுடன் மனைவி ரித்விகா காணாமல் போய்விடுகிறார். அவருக்கு உதவியாக இருந்த இனியாவும் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். பச்சிளம் குழந்தையை தூக்கி கொண்டு கருணாஸ் போலீஸ் நிலையத்தில் மனைவி காணவில்லை என்று புகார் கொடுக்கிறார். இதற்கிடையில் நீதிபதியின் மகள் Test Drive-க்காக விலையுயர்ந்த காரை ஒட்டி வரும் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக கார் விபத்தில் சிக்குகிறது. இதை மறைக்க பார்க்கும் கார் கம்பெனி என்று மற்றொரு புகாரும் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் கருணாஸ் புகாரை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஒரு கட்டத்தில் ரித்விகா கள்ளக்காதலனுடன் ஒடி விட்டார் என்று சொல்கிறது போலீஸ்.
உண்மையில் நடந்தது என்ன? ரித்விகா என்ன ஆனார்? இனியா ஏன் கொலை செய்யப்பட்டார்? என்பதற்கான விடையே படத்தோட மீதிக்கதை.
நடிகை-நடிகர்கள்:
கருணாஸ், அருண்பாண்டியன், ரித்விகா, இனியா, உமா ரியாஸ் கான், திலீபன், பாகுபாலி பிரபாகர், ரமா, ஆனந்த பாபு, ஷோபி, P.L.தேனப்பன் மற்றும் பலர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:
தயாரிப்பு : வெண்ணிலா கிரியேஷன்ஸ்
இயக்கம் : ராம்நாத் பழனிகுமார்
இசை : ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு : மகேஷ் முத்துசுவாமி
எடிட்டர் : ஆர் ராமர்
கலை : சீனு
ஒலி : ஏ.எஸ்.லட்சுமி நாராயணன்
பாடல்கள் : யுரேகா
சண்டை : சூப்பர் சுப்பராயன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்