பெங்களுர் பாரில் கிதார் இசைக்கலைஞராக மனம் போன போக்கில் மது, மாது என்று ஜாலியாக சுற்றி திரிகிறார் கார்த்திக் மதுசூதன். திருமணம், காதல் என்பதில் சிறிதும் நம்பிக்கையில்லாதவர். தன் நண்பனின் திருமணத்தில் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதா சிவதாஸை பார்க்கிறார். பார்த்தவுடன் ஈர்ப்பு ஏற்பட்டு உல்லாசத்திற்கு அழைக்க ஸ்ரீதா மறுத்தாலும் அவருடன் பேசும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. கார்த்திக் பற்றி தெரிந்து கொண்டாலும், ஸ்ரீதா நட்புடன் பழகி பெங்களுரை அவருடன் சுற்றி பார்க்கிறார். 7 நாள் சந்திப்புக்கு பிறகு ஸ்ரீதாவிற்கு கார்த்திக்கை பிடித்து போக, தன் காதலை சொல்கிறார். ஆனால் காதலும், திருமணமும் தனக்கு சரி வராது என்று மறுக்கிறார் கார்த்திக். பின்னர் ஸ்ரீதாவை சந்தித்து தானும் காதலிப்பதாக சொல்ல, ஸ்ரீதாவோ தான் ஏற்கனவே ஐந்து வருடங்களுக்கு முன் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சொல்கிறார். இதனை கேட்டு அதிர்ச்சியடையும் கார்த்திக் மனமுடைந்து வெளியேறுகிறார். சென்னையில் ஸ்ரீதாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. ஸ்ரீதா முதல் காதலனை திருமணம் அல்லது கார்த்திக் திருமணம் செய்தாரா? கார்த்திக் வந்து ஸ்ரீதாவை சந்தித்தாரா? என்பதே மீதிக்கதை.
நடிகை-நடிகர்கள்:
கார்த்திக் மதுசூதன், ஸ்ரீதா சிவதாஸ், ஜீவாரவி, ஸ்ரீரஞ்சனி, அர்ஜுன் மணிகண்டன், அக்ஷதா, எட்வின் ராஜ், சனா ஷாலினி, ஜீவி மதுசூதன் மற்றும் பலர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:
தயாரிப்பு : கனெக்டிங் டாட்ஸ் நிறுவனம்
இயக்கம் : கார்த்திக் மதுசூதன்
இசை : கே.சி.பாலசாரங்கன்
ஒளிப்பதிவு : மதன் சுந்தர்ராஜ், சுனில் ஜி.என்
எடிட்டிங் : சாம் ஆர் டி எக்ஸ்
பாடல்கள் : அரவிந்த் குமார், கலை இயக்கம் : கார்த்திக் மதுசூதன், நிஹாரிகா சதீஸ், ரத்தன் கங்காதர்
பி ஆர் ஒ : மணவை புவன்