2021ல் வெளியான முதல் பாகத்தில் 1950 ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழ் மக்கள் சந்தித்த பிரச்னைகள் பற்றியும், அதைப் பார்த்து வளர்ந்த பிரபாகரன் எப்படி இத்தகைய அடக்குமறையை எதிர்த்து எழுச்சிமிகு தலைவராக உருவான தருணம் பற்றி அவரது வாழ்க்கையில் பல தடைகளை தாண்டி படிப்படியாக முன்னேறும் 21 வயது வரை படத்தில் சித்தரித்திருந்தார்கள். இப்படத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்திருந்தது.
அதன் பிறகு தற்போது வெளிவந்திருக்கும் மேதகு இரண்டாம் பாகம் பூர்வகுடி தமிழீழ மக்களின் உரிமையை பறித்து சிங்களவர்களிடம் ஆங்கிலேயர்கள் கொடுத்து விட்டு சென்றவுடன் நடந்த அரசியல் மாற்றங்கள்? ஈழத்தமிழர்கள் அதிகாரத்தை கேட்க முடியாதபடி இலங்கையில் அவர்களை அடக்கி ஒடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடந்த படுபாதக செயல்கள் என்ன? ஈழ தமிழர்களுக்கு சொந்தமான வாழ்வாதாரங்களை அவர்களின், உரிமையை சொல்லும் அரிய பொக்கிஷமான புத்தகங்கள் அடங்கிய நூலகத்தை சிங்களவர்கள் எப்படி எரித்து சாம்பலாக்கினார்கள்? இதனை எதிர்த்;து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் (எல்டிடிஈ) எப்படி உருவானது? அதற்காக இன்னுயிரை தந்த போராளிகளின் தன்னலமற்ற தியாகம் என்ன? இந்த இயக்கம் பெரும் பலத்துடன் உருவாக காரணமான தமிழக அரசியல் தலைவர்கள் யார்? இதற்காக இந்திய அரசு மேற்கொண்ட ஒப்பந்தம் என்ன? என்பதை அந்த முக்கியமான 20 ஆண்டுகள் என்ன நடந்தது என்பதை இந்த படத்தில் காணலாம்.
நடிகை-நடிகர்கள்:
கௌரி சங்கர், நாசர் மற்றும் பல புதுமுகங்கள்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:
தயாரிப்பு : தஞ்சை குகன் குமார், அயர்லாந்த் கவிஞர் திருக்குமரன், டென்மார்க் சுமேஷ் குமார், தமிழன் சதீஸ், முனீஸ், பிரபாகரன் மற்றும் தங்க பிரபா
இயக்கம் : இரா.கோ யோகேந்திரன்
இசை : பிரவின்குமார்
ஒளிப்பதிவு : வினோத் ராஜேந்திரன்
பிஆர்ஒ : கே.எஸ்.கே செல்வா