குலுகுலு விமர்சனம்

அமேசான் காட்டுப் பகுதியில் பிறந்தவர் சந்தானம். அங்கிருக்கும் பழங்குடி மக்களை சிலர் துன்புறுத்தி அழைத்துச் செல்ல சிறு வயது சந்தானம் அதிலிருந்து தப்புகிறார். நாடு நாடாக சுற்றுகிறார், போகும் இடத்தில் அந்தந்த மொழிகளை கற்றுக்கொண்டு கிடைக்கும் வேலையை செய்து கொண்டு சுற்றித் திரிந்து கடைசியாக சென்னையில் வந்து வசிக்கிறார். 13 மொழிகளைப் பேசும் திறமை கொண்ட சந்தானத்திற்கு தமிழும், தமிழகமும் பிடித்துப் போவதால் இங்கேயே தங்கிவிடுகிறார். கூகுள் என அழைக்கப்படும் சந்தானம் யார் உதவி கேட்டாலும் வந்து செய்பவர். தங்கள் நண்பனை யாரோ கடத்திவிட்டதாக மூன்று இளைஞர்கள் வந்து சந்தானத்திடம் உதவி கேட்க நால்வரும் இணைந்து காணாமல் போனவரைத் தேட ஆரம்பிக்கிறார்கள். அந்தப் பயணத்தில் காணாமல் போனவரின் காதலியும் இணைகிறார். இது ஒருபுறமிருக்க இறந்து போகும் கோடீஸ்வர அப்பாவிற்கு இரண்டு மகன்கள். இரண்டாவது மனைவியின் மகள் பிரான்சிலிருந்து இவரின் இறுதிச் சடங்கிற்கு வர, சொத்தில் பங்கு கேட்டு வந்து விடுவாளோ என்கிற பயத்தில் அந்த பெண்ணை கொலை செய்ய திட்டமிடும் இரு அண்ணன்கள். காணாமல் போனவரை சந்தானம் கண்டுபிடித்தாரா? கொலை செய்ய துடிக்கும் அண்ணன்களிடமிருந்து தங்கையை காப்பாற்றினாரா? போன்ற கேள்விகளுக்கான பதில் தான் குலுகுலு படத்தோட மீதிக்கதை.

நடிகை-நடிகர்கள்:

சந்தானம், அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

ஒளிப்பதிவு : விஜய் கார்த்திக் கண்ணன்
இசை : சந்தோஷ் நாராயணன்
எடிட்டிங் : பிலோமின் ராஜ்
தயாரிப்பு : சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் எஸ்.ராஜ் நாராயணன்
இயக்கம் : ரத்னகுமார்
வெளியீடு : ரெட் ஜெயண்ட் மூவிஸ்
பிஆர்ஒ : யுவராஜ்