ஒரு பெண் நள்ளிரவில் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக காரில் தன் மகளுடன் கொமரோட்டுக்குச் செல்வதில் இருந்து கதை தொடங்குகிறது. அவர்கள் போகும் வழியில் திடீரென ஏதோ ஒன்று கார் மீது மோதுகிறது. இந்த நிலையில் மகளைக் கொன்று மரத்தில் தொங்கவிடுவதிலிருந்து கதை ஆரம்பமாகிறது. கொமரத்து கிராமத்தில் தொடர் கொலைகள் நடக்கின்றன. அந்த ஊரில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் உள்ள கிணற்றில் சடலங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. பிரம்மராட்சசன் அனைவரையும் கொன்று விடுவதாக கிராம மக்கள் நம்புகின்றனர். அது மட்டுமல்லாமல் அந்த வீட்டின் வளாகத்திலும் கொலைகள் நடக்கின்றது. சிறு குழந்தைகள் காணாமல் போய் காட்டில் உள்ள மரங்களில் பிணங்கள் போல தொங்குகிறார்கள். அந்த கிராமத்து பெரியவர் ஜனார்த்தன் கம்பீர் (மதுசூதன்) மற்றும் அவரது தம்பி ஏக்நாத் கம்பீர் (ரமேஷ் ராய்) ஆகியோரும் இதையே கிராம மக்களிடம் சொல்லி அந்த வீட்டை நோக்கி யாரும் செல்ல விடாமல் தடுக்கிறார்கள். அந்த கிராமத்தைச் சேர்ந்த எஸ் ஐ அந்த பாழடைந்த வீட்டிற்குச் சென்றபோது, கிணற்றில் தலையற்ற முண்டமாக தொங்குகிறார். அவரது உடல் பகுதி மட்டுமே இருக்கிறது தலையை காணவில்லை. இந்த கொலை வழக்கை தீர்ப்பதற்காக ஒரு புதிய எஸ் ஐ விக்ராந்த் ரோனா (கிச்சா சுதீப்) ஊருக்கு வருகிறார். இந்நிலையில் அங்கு கிராமத் தலைவர் ஜனார்தனின் (மதுசூதன்) அவரது மகன் சஞ்சு கோவில் நகைகளை திருடி சிறு வயதில் ஊரை விட்டு ஓடி விடுகிறான்.விக்ராந்த் ரோனா கிராமத்திற்குள் நுழைவதற்கு சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன மகன் சஞ்சு (நிரூப் பண்டாரி) திடீரென்று திரும்பி வருகிறார். ஜனார்த்தன் தனது நண்பரின் மகள் அபர்ணாவின் (நீதா அசோக்) திருமணத்தை தனது வீட்டில் நடத்த தயாராகிறார். சஞ்சுவும் அபர்ணாவும் காதலிக்கிறார்கள். அதே நேரத்தில் இந்த வழக்கை தனக்கே உரிய பாணியில் விக்ராந்த் ரோனா விசாரித்து வருகிறார். இந்த வழக்கின் விசாரணையின் போது அவர் சுவாரஸ்யமான விஷயங்களை அறிந்து கொள்கிறார். அந்த கிராமத்தைச் சேர்ந்த பல பள்ளிக் குழந்தைகள் கொல்லப்பட்டது தெரிகிறது. குழந்தைகள் கொல்லப்பட்ட காரணம் என்ன? விசாரணையில் தெரியவந்த உண்மை என்ன? விக்ராந்த் ரோனாவின் விசாரணைக்கும் சஞ்சுவுக்கும் என்ன சம்பந்தம்? கிராம மக்களை பயமுறுத்தும் பிரம்ம ராட்சசன் யார்? என்பதே படத்தோட மீதிக்கதை.
நடிகை-நடிகர்கள்:
கிச்சா சுதீப், நிருப் பண்டாரி, நீதா அசோக், ஜாக்குலின் பெர்னாண்டஸ், ரவி சங்கர் கவுடா, மதுசூதன் ராவ் மற்றும் பலர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:
ஒளிப்பதிவு: வில்லியம் டேவிட்
இசை: பி அஜனீஷ் லோக்நாத்
இணை தயாரிப்பாளர்: அலங்கார பாண்டியன்
தயாரிப்பாளர்கள்: ஜாக் மஞ்சுநாத், ஷாலினி மஞ்சுநாத்
எழுதி இயக்கியவர்: அனுப் பண்டாரி மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, ரேகா.