டாக்டர் சரவணன் (லெஜண்ட் சரவணன்) உலகம் முழுவதும் பிரபலமான ஒரு அற்புதமான விஞ்ஞானி. மருத்துவத்துறையில் பல சாதனைகளை படைத்த சரவணன் தனது கண்டுபிடிப்புகளால் நாட்டுக்கு உதவ விரும்புகிறார். சொந்த ஊரில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அவரைப் போன்ற திறமைசாலிகளை அங்கே உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறார். கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரியும் துளசியை (கீதிகா திவாரி) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அவர் தனது கனவுகளை நினைவாக்க முயற்சிக்கும் போது உள்ளூர் அரசியல்வாதிகளிடமிருந்து பல தடைகளை எதிர்கொள்கிறார். இந்நிலையில் சரவணனின் (ரோபோ சங்கர்) நண்பன் திருப்பதி குடும்பம் முழுவதும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். திடீரென்று திருப்பதி இறந்து போக சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் சரவணன். மறுபுறம் விஜே (சுமன்) ஆசியாவிலேயே மிகப்பெரிய இன்சுலின் சப்ளையர். அவர் தனது தனிப்பட்ட ஆய்வகத்தில் அனைவருக்கும் சட்டவிரோத சோதனைகளை நடத்துகிறார். சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடித்தால் தனது வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் என்பதால் இந்த முயற்சியை தடுக்க முயற்சி செய்கிறார். பிறகு என்ன நடந்தது? சரவணன் இந்தத் தடைகளை எப்படி எதிர்கொண்டார்? சரவணன் கண்டுபிடிக்க விரும்பும் மருந்து என்ன? கடைசியில் தடைகளை மீறி மருந்து கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தோட மீதிக்கதை.
நடிகை-நடிகர்கள்:
அருள் சரவணன், ஊர்வசி ரவுத்தேலா, விஜயகுமார், பிரபு, தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர் மற்றும் பலர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு: ஆர். வேல்ராஜ்
எடிட்டர்: ரூபன்
தயாரிப்பு: அருள் சரவணன்
இயக்கம்: ஜேடி ஜெர்ரி
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்