வி ஏ ஸ்டுடியோஸ், தயாரிப்பில், விஜய் அசோகன் இயக்கத்தில், க்ரிஷ், சபரீனா ஆலம், உதயகுமார், மேத்யூ வர்கீஸ், நடிப்பில் வெளிவந்திருக்கிற படம் வாட்ச்.
நாயகன் க்ரிஷ் ஒரு கார்ட்டூனிஸ்ட், ஒரு நாள் கார்ல போகும்போது லிப்ட், கொடுத்த ஒரு பத்திரிக்கையாளர் மூலமா, ஒரு மிகப்பெரிய மருத்துவ ஊழல் பற்றி தெரிய வருது. முன்னாள் ராணுவ வீரரின் மகன் என்பதால் நாட்டு மக்களை காப்பாற்றும் எண்ணத்தில் அவரே களத்தில் இறங்குகிறார். வில்லன்களிடம் மாட்டிக் கொண்டு தாக்கப்படுகிறார்.
அதனால் தலையில் அடிபட்டு மூன்று ஆண்டுகள் சுயநினைவு இல்லாமல் இருக்கிறார். நினைவு திரும்பிய பின் ஃபர்ஸ்ட் அவர் பார்த்த முகங்கள் வேறு முகங்களாக தெரிகிறது. அந்த சிக்கலில் இருந்து மீண்டாரா? மருத்துவ ஊழல் குற்றவாளிகளை கண்டுபிடித்தாரா? என்பதுதான் படத்தோட மீதி கதை.
நாயகன் கிரீஸ் தன்னோட கதாபாத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்.
நாயகி சப்ரினா ஆலமுக்கு வித்தியாசமான கதாபாத்திரம். வில்லன்களாக நடித்திருக்கும் மேத்யூ வர்கீஸ், உதயகுமார், கதாபாத்திரத்துக்கு ஏற்ப சிறப்பாக நடித்து இருக்காங்க.
சுகன்யா சுந்தரேஸ்வரன் இசையில் பாடல்களை கதையை ஒட்டி செல்கின்றன,
சமுதாய சிக்கலை மையமாகக் கொண்ட கதையில் நாயகனுக்கு ஒரு புதிய நோயை கொடுத்து வித்தியாசமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் விஜய் அசோகன்.