சென்னையில் முதன்முறையாக தீவிர அறுவைசிகிச்சையற்ற பேஸ்மேக்கர் 60 வயது முதியவருக்கு போர்டிஸ் மலர் மருத்துவமனையில் பொறுத்தப்பட்டது

~ சரியான நேரத்தில் பேஸ்மேக்கர் கொண்டு சிகிச்சை தரப்பட்டதால் இணை நோய்கள் – சிறுநீரகம் செயலிழந்த, கோவிட் நிமோனியா – கொண்ட நபருக்கு புது வாழ்வு கிடைத்தது ~

சென்னை, 9 மார்ச் 2022: அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் டாக்டர் பாபு ஏழுமலை தலைமையிலான இதயப் பிரிவு மருத்துவர் குழு, முதன்முறையாக இரட்டை அறை பேஸ்மேக்கரை அறுவைசிகிச்சை இல்லாமல் வெற்றிகரமாகப் பொறுத்தியுள்ளனர். சென்னையில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சிகிச்சை, இரண்டு நோயாளர்களுக்குச் செய்யப்பட்டது. சரியான நேரத்தில் மருத்துவர்கள் இந்த சிகிச்சையை மேற்கொண்டதால் 60 வயது மற்றும் 92 வயது நபர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதயப் பிரச்சனைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள், கோவிட் நிமோனியா, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பிற இணை நோய்களுடன் அவதிப்பட்டு, டயாலிசிஸிலும் இருந்தார்.

டயாலிசிஸ் நிலையில் சிறுநீரகப் பிரச்சினை கொண்ட 60 வயது நோயாளர் ஃபோர்டிஸ் மலர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு துணைநோய்களுடன் கோவிட் நிமோனியாவும் தொற்றியிருந்தது. அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை மருத்துவர்கள் சரியான முடிவை எடுத்ததால் தற்போது அவர் உடல்நலம் பெற்றுள்ளார். இந்த நோயாளர் மிகவும் தீவிரமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். மாரடைப்புடன் தொடர்புடைய குறைந்த இதயத்துடிப்பைக் கொண்டிருந்தார். அத்துடன் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, கோவிட் தொற்றும் கண்டறியப்பட்டது. ஏற்கெனவே அவர் டயாலிசிஸ் நிலையில் இருந்ததால், அவருடைய டயாலிசிஸ் நடைமுறையை பாதிக்காத வகையில் மருத்துவ நிபுணர் குழு தீர்வை அடையாளம் காண முற்பட்டது. வழக்கமான கம்பி கொண்ட பேஸ்மேக்கர்மற்றும் கம்பியற்ற பேஸ்மேக்கர் பயன்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் அதிக பலன்கள் தரக்கூடிய இரண்டு இதய அறைகளுக்கான கம்பியற்ற பேஸ்மேக்கரைப் பொறுத்துவது என மருத்துவர் குழு முடிவு செய்தது.

மற்றொருவர், 92 வயது முதியவர், அடையாறு ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு வந்தபோது அடிக்கடி மயக்கமடையும் பிரச்சினையைக் கொண்டிருந்தார். அத்துடன் இதயம் முழுமையாக அடைபட்டு நிமிடத்துக்கு 33 இதயத்துடிப்பை மட்டுமே கொண்டிருந்தார். இப்போது அந்த நோயாளர் கம்பியற்ற பேஸ்மேக்கர் பொறுத்தும் சிகிச்சை முடிந்து 24 மணி நேரத்தில் வீடு திரும்பி, தன் அன்றாட வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டார். டூயல் சேம்பர் லீட்லெஸ் பேஸ்மேக்கர்களுக்கு முன், பல ஒற்றை அறை லீட்லெஸ் இதயமுடுக்கிகள் (மைக்ரா விஆர்) டாக்டர் பாபு ஏழுமலை அவர்களால் 2019 ஆம் ஆண்டு முதல் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளன. சிங்கிள் சேம்பர் லீட்லெஸ் நிரந்தர இதயமுடுக்கி செயல்முறைக்கு உட்பட்ட இளைய நபர் சிக்கலான பிறவி இதய நோய் கொண்ட 31 வயதான ஒரு இளம் பெண் ஆவார்.

இந்தப் புதிய சிகிச்சை முறை குறித்து ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் மற்றும் சீனியர் கன்சல்டன்ட் டாக்டர் பாபு ஏழுமலை கூறுகையில், “எங்கள் மருத்துவக் குழுவுக்கு இரண்டுமே சவாலான நோய்நிலைகளே. முதல் நோயாளர் மிகவும் மூத்தவர். அடிக்கடி மயக்கமடைதல், முழு இதய அடைப்புப் பிரச்சினைகளுடன் வந்தார். அவருக்கு வயது சார்ந்த மற்ற பிரச்சினைகளான உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், முறையற்ற தூக்கம், சிறுநீர் கட்டுப்பாடு இல்லாமை, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளும் இருந்தன. அவருக்கு வரம்போல் இந்த சிகிச்சை அமைந்துள்ளது. இந்த சிகிச்சை முடிந்து 24 மணி நேரத்தில் வீடு திரும்பலாம். பேஸ்மேக்கர் ஆயுள் நீண்டது. ஒருவேளை ஃபேஸ்மேக்கரின் செயல்பாடு அதன் ஆயுளுக்குப் பிறகு முடிந்தால், புதிய பேஸ்மேக்கர் பொறுத்த அறுவைசிகிச்சை செய்யத் தேவையில்லை. அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படும் பகுதியில் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியமும் மிகமிகக் குறைவு.”

“அடுத்த சவால் டயாலிசிஸ் நோயாளருக்கு சிகிச்சை அளிப்பது. அந்த நபர் உயிரோடு இருப்பதற்கு சிறுநீரகமும் இதயமும் மிகவும் ஆதாரமானவை. அதனால், அவருடைய டயாலிசிஸ் நடைமுறையைத் தொந்தரவு செய்யாமல் சிகிச்சை குறித்துத் திட்டமிட வேண்டிய சவால் இருந்தது. இந்த நோயாளரின் பிரச்சினையை இன்னும் சவால்மிக்கதாகவும் சிக்கலானதாகவும் ஆக்கியது என்னவென்றால், அவருக்கு கோவிட் வைரல் நிமோனியா கண்டறியப்பட்டதுதான். அத்துடன் பாக்டீரியத் தொற்றும் கூடுதலாக இருந்தது. இதுபோன்று தொற்றுநோய் இருக்கும்போது, வழக்கமான பேஸ்மேக்கரைப் பொறுத்த முடியாது. அவருடைய இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 40-க்கும் குறைவாக இருந்தது. இதயத்துடிப்பை அதிகரிக்க அவருக்கு பேஸ்மேக்கர் பொறுத்த அறிவுறுத்தப்பட்டது. கடைசியாக இரண்டு இதய அறைகளுக்கான கம்பி இல்லாத பேஸ்மேக்கரைப் பொறுத்தினால், அது டயாலிசிஸ் நடைமுறையை தொந்தரவு செய்யாது என முடிவுசெய்தோம். வழக்கமான பேஸ்மேக்கருக்கு பதிலாக கம்பி இல்லாத பேஸ்மேக்கரைப் பொறுத்துவதில் உள்ள சாதகமான அம்சம் என்னவென்றால், ரத்தம் அடர்த்தியாவதைத் தடுக்கும் மருந்தை நிறுத்தாமல் இந்த சிகிச்சையைச் செய்யலாம். அத்துடன் வைரல், பாக்டீரிய நோய்த்தொற்று இருக்கும் நிலையிலேயே சிகிச்சை தரலாம். வழக்கமான பேஸ்மேக்கரில் இருக்கும் கம்பி ரத்த நாளங்களில் சென்றுவரும். நீண்ட காலத்தில் இந்த ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, டயாலிசிஸ் நிலையில் இருக்கும் நோயாளர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். சிறுநீரக நோயாளிகளுக்கு கம்பியற்ற பேஸ்மேக்கர் ஒரு வரம். ஏனென்றால், அவர்களுடைய ரத்த நாளங்கள் தொந்தரவு செய்யப்படாமல் டயாலிசிஸ் செய்வதற்கு ஏற்ற நிலையில் இருக்கும். இரண்டு இதய அறைகளுக்கான பேஸ்மேக்கர் தொழில்நுட்பத்தில் உள்ள வசதி என்னவென்றால், அது கிட்டத்தட்ட இயற்கையான இதயத்துக்கு இணையானது. தேவைப்படும் நேரத்தில் இதயத்துடிப்பை இது அதிகரிக்கும். இந்த சிகிச்சைக்குப் பிறகு நோயாளர் மருத்துவமனையில் இருக்கும் நாட்களும், ஆன்ட்டிபயாட்டிக் பயன்பாடும் குறையும்” என்றார்.
  
வெற்றிகரமான இந்த சிகிச்சைகள் குறித்து, ஃபோர்டிஸ் மலர் மருத்துவனையின் ஃபெசிலிட்டி டைரக்டர் திரு. ஆர். சந்திரசேகர் கூறுகையில், “இரண்டு இதய அறைகளுக்கான கம்பியற்ற பேஸ்மேக்கர் தொழில்நுட்பம் என்பது வயது முதிர்ந்த நோயாளர்கள், டயாலிசிஸ் நிலையில் இருப்பவர்கள், ரத்தம் அடர்த்தியாகாமல் இருப்பதற்கு மருந்து எடுப்பவர்களுக்கு மிகவும் உதவிகரமானது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளர் நீண்ட நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டுமே என்கிற கவலையையும் இது குறைக்கிறது. வழக்கமான மற்ற சிகிச்சைகளுக்கு மாறாக, இந்த சிகிச்சை முடிந்தவுடன் ஒருவர் இயல்பான வாழ்க்கைக்கு மிக விரைவாகத் திரும்பலாம். மற்றுமொரு புதிய மருத்துவ மைல்கல்லைத் தொட்ட டாக்டர் பாபு ஏழுமலை மற்றும் மருத்துவ நிபுணர்கள், தொற்றுக் கட்டுப்பாட்டாளர்கள், மயக்க மருந்து நிபுணர், டயட்டீசியன், செவிலியர்கள் அடங்கிய பல்துறை நிபுணர் குழுவின் ஒருங்கிணைப்புக்கும் செயல்பாட்டுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

About Fortis Healthcare Limited

Fortis Healthcare Limited – an IHH Healthcare Berhad Company – is a leading integrated healthcare services provider in India. It is one of the largest healthcare organizations in the country with 27 healthcare facilities (including projects under development), 4100 operational beds and over 419 diagnostics centres (including JVs). Fortis is present in India, United Arab Emirates (UAE) & Sri Lanka. The Company is listed on the BSE Ltd and National Stock Exchange (NSE) of India. It draws strength from its partnership with global major and parent company, IHH, to build upon its culture of world-class patient care and superlative clinical excellence. Fortis employs 23,000 people (including SRL) who share its vision of becoming the world’s most trusted healthcare network. Fortis offers a full spectrum of integrated healthcare services ranging from clinics to quaternary care facilities and a wide range of ancillary services.