ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து, 1 to 12 நேரடி வகுப்புகள், தியேட்டர் & ஜிம்களில் 50% அனுமதி

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை.

அப்போது முதல்வரிடம் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தலைமைச்செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் முதல்வர் விடுத்த அறிக்கையில்..

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பிப்.1ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் 1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.

தமிழ்நாடு முழுவதும் பிப்.1ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

துணிக்கடைகள் மற்றும் நகைக் கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.

திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை விடுதிகளில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி.

கொரோனா தொற்று காரணமாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்ட இரவு ஊரடங்கு நாளை (ஜன.28) முதல் விலக்கிக் கொள்ளப்படுகிறது. வரும் ஞாயிற்றுக் கிழமை (ஜன.30) முழு ஊரடங்கு கிடையாது.

தமிழகத்தில் அழகு நிலையங்கள், சலூன்கள், கேளிக்கை பூங்காக்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி.

திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 பேரும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 50 பேரும் அனுமதி.