“ரசிகர்கள் 100 சதவீதம் சிரித்து, மகிழ்ந்து குதூகலிக்கும், மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக “பிளான் பண்ணி பண்ணனும்” இருக்கும்


 
நீண்ட காத்திருப்பிற்கு பிறகு  “பிளான் பண்ணி பண்ணனும்” திரைப்படம் டிசம்பர் 30, 2021 வெளியாவதில், நடிகை ரம்யா நம்பீசன் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.

இது குறித்து நடிகை ரம்யா நம்பீசன் கூறும்போது,
“பிளான் பண்ணி பண்ணனும்”  திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி திரைப்படம், ஆனால், குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் இது ஒரு உணர்வுபூர்வமான அனுபவமாக இருந்தது. முதலாவதாக, திரைப்படத்தின்  வெளியீட்டில் எந்தவித சமரசமும் செய்யாமல், மிகவும் வலுவாக இருந்த தயாரிப்பாளர்கள் ராஜேஷ் குமார் மற்றும் L சிந்தன் ஆகியோருக்கு  என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொற்றுநோய் சூழ்நிலையைக் கையாள பல பெரிய தயாரிப்பாளர்கள் கூட  OTT வெளியீட்டை தேர்ந்தெடுத்தனர் என்பது வெளிப்படையானது, ஆனால் எங்கள் தயாரிப்பாளர்கள் நீண்ட கால லாக்டவுனுக்குப் பிறகும், பார்வையாளர்கள் சிரித்து மகிழவும், அந்த தருணத்தை கொண்டாடவும், இது  தியேட்டர் அனுபவத்திற்காக வடிவமைக்கப்பட்ட படம் என்றும் உறுதியாக நம்பினர். இந்த வெள்ளியன்று திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், அவர்களின் கனவு நனவாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  “பிளான் பண்ணி பண்ணனும்”  படத்தின் ஒரு பகுதியாக இருப்பதே ஒரு அழகான அனுபவமாகும், மேலும் ஒரு குழுவாக நாங்கள் மிக மகிழ்ச்சியாக இருந்தோம். வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, எல்லொருக்குள்ளும் நேர்மறை அதிர்வுகளைப் பகிர்ந்து கொண்டதில் இந்த அனுபவம் சிறப்பாக இருந்தது.  நடிகர் ரியோ ராஜ் ஒரு திறமையான கலைஞர், அவருடன் பணியாற்றியதில், நான் உணர்ந்தது என்னவென்றால், அவர் ஒரு  சிறந்த பொழுதுபோக்கு நட்சத்திரமாகவும், அதே நேரம் கனமான கதாப்பாத்திரங்களை கையாளும் சிறந்த நடிகராகவும் பிரகாசிக்கும் திறனைக் கொண்டிருக்கிறார். பால சரவணன் மற்றும் டீமில் உள்ள அனைவரும் மிகவும் நட்பாக இருந்தனர். இயற்கை இனிமையான இசை தரும், அந்த வகையில் யுவன் ஷங்கர் ராஜா சாரின் இசை மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படம் ஒரு மகிழ்ச்சிமிக்க பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும், மேலும் ரசிகர்களுக்கு 100% குதூகலம் தரும் மிகச்சிறந்த பொழுது போக்கு திரைப்படமாக “பிளான் பண்ணி பண்ணனும்” இருக்கும்.

“பிளான் பண்ணி பண்ணனும்”  திரைப்படத்தை இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார் மற்றும் Positive Print Studios LLP சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜேஷ் குமார்-L சிந்தன்  இப்படத்தை தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், B ராஜேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் RDX படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.