பெண்கள் மீதான பல்முனை தாக்குதால்களும் அதை எதிர்கொள்வதும் என்ற கருத்தரங்கம் ‘ஆடிங் ஸ்மையில்ஸ்’ நிறுவனம் சார்பில் சென்னையில் நடத்தப்பட்டது. இதில் நடிகை நதியா, முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி, சவுமியா அன்புமணி, விஜயதாரணி எம்.எல்.ஏ., காவல்துறை அதிகாரி வனிதா, வழக்கிறிஞர் அருள்மொழி, கவிஞர் சல்மா ஆகியோர் கலந்துக் கொண்டனர்
பெண்கள் மீதான தாக்குதல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை எதிர்கொள் சமூக ஆர்வளர்கள் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், கருத்தரங்களையும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கும் ‘ஆடிங் ஸ்மையில்ஸ்’ எனற தொண்டு நிறுவனத்தின் சார்பில் பெண்கள் மீதான பல்முனை தாக்குதல்களும், அதனை எதிர்கொள்வதும் என்ற கோணத்தில் கருத்தரங்கம் சென்னையில் உள்ள கிரௌன் பிளாசா ஓட்டலில் நடந்தது.
இந்நிகழ்ச்சியை கடவுள் வாழ்த்து பாடியும், குத்துவிளக்கு ஏற்றியும் ஆரம்பித்தனர். இதில் ‘தி 19’ நிறுவனத்தில் தலைவர் பிரசன்னா வரவேற்புரை நிகழ்த்தினார். கருத்தரங்கத்துக்கு நீதியரசர் மோகன் சிறப்பு வருந்தினராக கலந்துக்கொண்டார். நடிகை நததியா முக்கிய விருந்தினராக பங்கேற்று பெண்கள் மீதான தாக்குதல் குறித்து பல கருத்துகளை முன்வைத்து பேசினார். நடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி, சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, ஆகியோர் அரசியலில் பெண்களின் நிலை மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பேசினார்கள்.
இதேபோன்று, காவல்துறை உயர் அதிகாரி வனிதா பேசும்போது, காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்தும், அதை எப்படி எதிர்கொள்வது குறித்தும் விளக்கமான கருத்துகளை எடுத்துரைத்தார். பசுமை தாயகத்தின் தலைவர் சவுமியா அன்புமணி பேசும்போது, இந்த சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கருத்துகளை முன்வைத்து பேசினார்.
வழக்கறிஞர் அருள்மொழி, நடிகர் ஆரி, கவிஞர் சல்மா உள்ளிட்டோரும் பெண்கள் மீதான தாக்குதல்கள் குறித்து பல்வேறு கருத்துகளையும் எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சியை ஆடிங் ஸ்மையில்ஸ் தொண்டு நிறுவனத்தின் தலைவர் கவிப்பிரியா ஏற்பாடு செய்தார். அவருடன் ஜெ.ஜெ.டைமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சீனிக் நாயக், கிரௌன் பிளாசா குழுமத்தின் தென்னிந்திய பொது மேலாளர் அரிந்தம் குனார் ஆகியோர் இணைந்து நடத்தினர்.