தெலங்கானா மாநில ஆளுனரும், புதுச்சேரி துணைநிலை ஆளுனருமான திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் இந்த ஒருநாள் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்
சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் 600-க்கும் அதிகமான கண் அறுவைசிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர்
சென்னை / 10 அக்டோபர் 2021: விழித்திரை அறுவைசிகிச்சை மீது நடைபெறும் இந்தியாவின் மிகப்பெரிய வருடாந்திர கருத்தரங்கின் 11-வது பதிப்பான ரெட்டிகான் (RETICON), என்பதனை இன்று சென்னையில் டாக்டர். அகர்வால்ஸ் ரெட்டினா ஃபவுண்டேஷன் நடத்தியது. ஒருநாள் நிகழ்வான இந்த சர்வதேச கருத்தரங்களில் இந்தியாவிலிருந்தும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் 600-க்கும் அதிகமான கண் மருத்துவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர். தொடர்ந்து மாற்றமடைந்து வருகின்ற விழிப்படிக விழித்திரை கோளாறு மீதான சமீபத்திய உத்திகள் மற்றும் தொழில்நுட்பம் மீதான நிகழ்நிலைத் தகவலை இதில் பங்கேற்ற விழிப்படிக விழித்திரை துறையில் முதுகலை மாணவர்கள் அறிந்துகொண்டனர். மாண்புமிகு தெலங்கானா மாநில ஆளுனரும், புதுச்சேரி துணைநிலை ஆளுனருமான திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் குத்துவிளக்கேற்றி இக்கருத்தரங்கை தொடங்கி வைத்தார். டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் புரொஃபசர் டாக்டர். அமர் அகர்வால், ராஜன் ஐ கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். மோகன்ராஜன், டாக்டர். அகர்வால்ஸ் குழும கண் மருத்துவமனைகளின் இயக்குனர் மற்றும் கண் ஆராய்ச்சி மையத்தின் பொதுச்செயலர் டாக்டர். அதியா அகர்வால், மும்பையின் ஆதித்யா ஜோத் கண் மருத்துவமனையின் பத்மஸ்ரீ புரொஃபசர் டாக்டர். எஸ். நடராஜன் ஆகியோர் இக்கருத்தரங்கு நிகழ்வில் பங்கேற்று, விழித்திரை அறுவைசிகிச்சையில் புதிய இயல்புநிலையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து உரையாற்றினர்.
விழிப்படிக விழித்திரை சிறப்பு பிரிவில் நோயறிதல் செயல்பாடுகள் மற்றும் சிகிச்சை விருப்பத்தேர்வுகளில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் மீது ஒரு துரிதப்பார்வையைப் பெற முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பொது கண் மருத்துவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கவேண்டும் என்ற எண்ணத்தோடு புரொஃபசர் டாக்டர். அமர் அகர்வால் அவர்களது சிந்தனையின்படி ரெட்டிகான் – ன் 11-வது நிகழ்வு திட்டமிடப்பட்டது. கண்ணின் பின்புறப் பகுதியில் (விழிப்படிக விழித்திரை) செய்யப்படும் அறுவைசிகிச்சைகள் மற்றும் நோய் கண்டறிதல்களில் நிகழ்ந்திருக்கின்ற சமீபத்திய முன்னேற்றங்களை இக்கருத்தரங்கு நேர்த்தியான விளக்கத்துடன் முன்வைத்தது. இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் உள்ள முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் கண் மருத்துவர்களுக்கு தொடர்ந்து மாற்றம் கண்டு வரும் விழித்திரை கோளாறு மேலாண்மை பற்றிய தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு வலையமைப்பு செயல்தளமாக ரெட்டிகான் திகழ்கிறது. அத்துடன், இத்துறையில் மேலதிக ஆராய்ச்சிக்கான வினையூக்கியாகவும் இது செயல்படுகிறது. இக்கருத்தரங்கில் வழங்கப்பட்ட சிறப்புரைகள் வழியாக விழிப்படிக விழித்திரை நோய்கள் மேலாண்மை மற்றும் சமீபத்தில் நிகழ்ந்திருக்கும் புதிய முன்னேற்றங்கள் பற்றிய நிகழ்நிலைத் தகவல்களை இத்துறையில் இயங்கும் சிறப்பு நிபுணர்கள் பெற்றுக்கொண்டனர்.
வருடாந்திர கருத்தரங்காக நடத்தப்படும் ரெட்டிகான், கண் மருத்துவ நிபுணர்கள் அதிகம் விரும்பித்தேடும் நிகழ்வாக இருக்கிறது. இக்கருத்தரங்கில் உரையாற்றுகின்ற வல்லுனர்களின் தரமும், அனுபவமும் மற்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலால் இதற்குத் தரப்படுகின்ற கிரெடிட் புள்ளிகளும் இதற்கு காரணமாகும். இந்த ஆண்டு நிகழ்விற்கான கருப்பொருளாக, “விழித்திரை அறுவைசிகிச்சையில் புதிய இயல்புநிலையை எதிர்கொள்வது” என்ற தலைப்பு தேர்வு செய்யப்பட்டிருந்தது. டாக்டர். ஆனந்த் ராஜேந்திரன், டாக்டர். அதுல் தவான், டாக்டர். மகேஷ் சண்முகம், டாக்டர். மனோஜ் காத்ரி, டாக்டர். முரளி அரிகா, புரொஃபசர் டாக்டர். எஸ். நடராஜன், டாக்டர். பர்வீன் சென், டாக்டர். பிரமோத் எஸ். பெண்டே மற்றும் டாக்டர். வசுமதி வேதாந்தம் போன்ற பிரபல ஆளுமைகள் சிறப்புரை ஆற்றியவர்களுள் சிலர். மருத்துவம் சார்ந்த விழித்திரை, விழித்திரை அறுவைசிகிச்சை மற்றும் விழிப்படிக – விழித்திரை அறுவைசிகிச்சை என்ற தலைப்புகளையொட்டி இந்நிகழ்வின் அமர்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் உரையாற்றிய புரொஃபசர் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் புரொஃபசர் டாக்டர். அமர் அகர்வால் கூறியதாவது: “விழிப்படிக – விழித்திரை அறுவைசிகிச்சையில் சமீபத்திய புத்தாக்க முன்னேற்றங்கள் பற்றி அறிந்துகொள்வதற்கான இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான கண் அறுவைசிகிச்சை நிபுணர்கள் பங்கேற்ற ரெட்டிகான் கருத்தரங்கின் 11-வது பதிப்பு மிகப்பெரிய வெற்றி நிகழ்வாக அமைந்தது. இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 15 மில்லியன் பார்வைத்திறன் இழந்த நபர்கள் இருக்கின்றனர். இறுதி பார்வைத்திறனுக்கு மிக முக்கியமாக இருப்பது கண்ணின் ஒரு பகுதியான விழித்திரை. இது சேதமடையுமானால், பார்வைத்திறனும், தானியக்கமாக பாதிக்கப்பட்டுவிடும். ஆகவே, 30 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் அவர்களது விழித்திரையை குறித்த காலஅளவுகளில் கண்டிப்பாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். வயது முதிர்ச்சி தொடர்புடைய விழிப்புள்ளி சிதைவு மற்றும் நீரிழிவு சார்ந்த விழிப்புள்ளி திரவத்தேக்கம், போன்ற பிற கண் நோய்களோடு ஒப்பிடுகையில், வராமல் தடுக்கக்கூடிய பார்வைத்திறன் இழப்புக்கு முக்கிய காரணமாக இன்றைக்கு விழித்திரை நோய்களே இருக்கின்றன. உரிய நேரத்திற்குள் நோய் பாதிப்பு கண்டறியப்படுமானால், விழித்திரை நோயை திறம்பட சிகிச்சையளித்து சமாளிக்க இயலும். துரதிருஷ்டவசமாக, கண்புரை அல்லது கண் அழுத்தம் போன்ற நோய்களோடு ஒப்பிடுகையில், பார்வைத்திறன் இழப்பை தடுப்பதற்கான செயல்திட்டங்களில் விழித்திரை சார்ந்த நோய்களுக்கு குறைவான முன்னுரிமையே தரப்படுகிறது.”
அவர் மேலும் பேசுகையில், “விழித்திரை சார்ந்த நோய்கள் பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில் குறைவாகவே இருக்கிறது. இதுவே, விழித்திரை அறுவைசிகிச்சை துறையை மிகவும் முக்கியமானதாக ஆக்குகிறது. விழித்திரை நோய்கள், அவைகளின் மேலாண்மை மற்றும் சிகிச்சை தொடர்பான மிக துரிதமான மருத்துவ முன்னேற்றங்களும், கண்டுபிடிப்புகளும் கட்டுபடியாகக்கூடிய கட்டணங்களில் கிடைப்பதுடன், திறன்மிக்கவையாகவும் இருக்கின்றன. எனினும், விழித்திரை கண் மருத்துவயியலில் திறமையான நிபுணர்களுக்கு கடுமையான பற்றாக்குறை இந்தியாவில் நிலவுகிறது. சிகிச்சையின் விளைவுகளை மேம்படுத்துவதற்காக சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் புத்தாக்கங்கள் பற்றிய நிகழ்நிலைத் தகவல்கள் அனைத்து விழித்திரை அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கும் கிடைக்குமாறு செய்வதற்கும் இந்த இடைவெளியை பூர்த்தி செய்வதே ரெட்டிகான் கருத்தரங்கின் நோக்கமாகும்.” என்று குறிப்பிட்டார்.
ரெட்டிகான்: மேலும் தகவல்களுக்கு: https://reticon.in