மார்வெலின் மிக முக்கியமான சூப்பர் ஹிரோ பாத்திரமாக நடிப்பது, தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக நடிகர் டாம் ஹார்டி தெரிவித்துள்ளார். உடல்ரீதியாகவும், டெக்னிலாகவும், உருவாக்கத்திலும் பெரும் சாவால்களை கோரும் மார்வெலின் இரண்டு கதாபாத்திரங்களை, ஒரே படத்தில் செய்வது சாதாரனமானது அல்ல. அதிலும் ஒரு பாத்திரம் எட்டு அடி ஆஜானுபாகுவான, பசியுடனும், கோபத்துடனும் மிரட்டும் ஏலியனாக இருக்கும். ஆனாலும் நடிகர் டாம் ஹார்டி மீண்டும் Eddie Brock / Venom ஆக நடித்தது, மிகச்சிறந்த அனுபவமாக இருந்ததாக கூறுகிறார். Venom படத்தின் சீக்குவலாக வரும் “Venom : Let there be Carnage” ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை குவித்துள்ளது.
இப்படம் குறித்து நடிகர் டாம் ஹார்டி கூறும்போது
ஆன்மாவின் இரண்டு வெவ்வேறு பகுதிகளை, திரையில் கொண்டுவருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னைப் பொறுத்தவரை வெனோமும், எடியும் (Eddie மற்றும் Venom ) ஒன்று தான், அவை ஒரு அசுரனாகவும், எடி எனும் மனிதனாகவும் உண்மையால் வேறுபடுகின்றன, ஆனால் அவை எப்போதும் ஒரு தனிமனிதனுக்குள் அடங்கியுள்ள ஒரே பாத்திரம் தான். இது முழுக்க முழுக்க திரைக்கதையாளரால் எழுதப்பட் அருமையான திரைக்கதையில் உருவாகியுள்ள வடிவம். அதை திரையில் உருவாக்குவது மிகச்சிறந்த அனுபவத்தை சந்தோஷத்தையும் தருகிறது. இந்த இரு பாத்திரங்களை ஏற்கும் சவாலில், என்னால் என்ன செய்ய முடியும் என்று முயன்று பார்க்க அதிகம் விரும்புகிறேன் என்றார்.
மிகுந்த நுண்ணுனர்வுடன் உருவாக்கப்பட்ட திரைக்கதை, மாயாஜாலத்தை கண் முன் நிறுத்தும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ், மிகத்திறமையாக பாத்திரத்தை கையாண்ட டாம் ஹார்டியின் நடிப்பு, என அனைத்தும் இணைந்து, 2018 ஆம் ஆண்டில் வெனோம்(Venom) உலகமெங்கும் பார்வையாளர்களின் இதயங்களை கவர்ந்து, மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது.
தற்போது இதன் அடுத்த பாகத்தை ஆண்டி செர்கிஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் டாம் ஹார்டி, வூடி ஹாரெல்சன், மைக்கேல் வில்லியம்ஸ் மற்றும் நயோமி ஹாரிஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
Sony Pictures Entertainment India நிறுவனம் 3D, IMAX மற்றும் 4DX வடிவங்களில், இந்தி, தமிழ்,ஆங்கிலம் மற்றும் தெலுங்கு என நான்கு மொழிகளில் “Venom : Let there be Carnage” திரைப்படத்தை வெளியிடுகிறது.
மஹாராஷ்டிராவில் திரையரங்குகள் அனுமதிக்கபட்டவுடன் அக்டோபர் 22 முதல் இப்படம் வெளியாகிறது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் அக்டோபர் 14 முதல் வெளியாகிறது.