பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் ப்ரீதி ஷஹானி, Talvar, Raazi மற்றும் Badhaai Ho போன்ற படங்களை தந்தவர், தற்போது விருது பெற்ற புலனாய்வு பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஜோசி ஜோசப், இந்திய சுகாதார அமைப்பை கேள்விக்குள்ளாக்கும், பெரும் விசாரணையை மேற்கொண்டதை அடிப்படையாக வைத்து, அவருடன் இணைந்து முற்றிலும் வித்தியாசமான களத்தில், புதியவகை திரைப்படத்தை தரவுள்ளார். இத்திரைப்படம் மலையாளத் திரையுலகில் புகழ் பெற்ற இயக்குநர் மகேஷ் நாராயணன், இந்தியில் இயக்கும் முதல் திரைப்படமாக உருவாகிறது.
இத்திரைப்படம் தயாரிப்பாளர் ப்ரீதி ஷஹானி உடைய புதிய நிறுவனமான ‘Tusk Tale Films’ உடைய அறிமுக படைப்பாக உருவாகிறது. இந்நிறுவனத்தை அறிமுகப்படுத்திய ப்ரீதி ஷஹானி, இந்நிறுவனம் வியத்தகு கதைகளை, இந்திய மக்களின் பிர்சசனைகளை, அதன் வேர்களை ஆராய்ந்து சொல்லும் படைப்புகளை உருவாக்குவதை குறிக்கோளாக கொண்டு இயக்கும் என்றார்.
Phantom Hospital திரைப்படம், Tusk Tale Films மற்றும் ஜோசி ஜோசப் அவர்களின் நிறுவனமான Confluence Media வின் மிகச்சிறந்த படைப்பாக இருக்கும்.
Founder and CEO of Tusk Tale Films, ப்ரீதி ஷஹானி தனது நிறுவனம் குறித்தும், ஜோசி ஜோசப் மற்றும் மகேஷ் நாராயணன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும் கூறியதாவது..
Tusk Tale Films நிறுவனத்தில், இது எங்கள் புதிய முயற்சி உணர்ச்சிகள் நிறைந்த மற்றும் நம் காலத்தை பிரதிபலிக்கும் வியத்தகு நிஜக்கதைகள் பலவற்றை திரையில் தரவுள்ளோம். இந்தியளவில், நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை, தன் திரைப்படங்களால் கவர்ந்திருக்கும் தொலைநோக்கு மிக்க இயக்குநர் மகேஷ் நாராயணன் மற்றும் இந்தியாவின் சிறந்த புலனாய்வு பத்திரிகையாளர் ஜோசி ஜோசப் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. நாங்கள் ஒன்றாக இணைந்து , ஒட்டு மொத்த நாடுமே அதிரும் வகையிலான, நாட்டில் பெரும் ஊழலை வெளிப்படுத்தும், மிகவும் அதிர்ச்சியூட்டும் உண்மைக்கதையை, ஒரு பொழுதுபோக்கு தன்மையுடன் கூடிய திரைப்படமகாத் தரவுள்ளோம் என்றார்.
Founder of Confluence Media ஜோசி ஜோசப் கூறியதாவது…
இந்தியாவின் விசித்திரமான விஷயம் என்னவென்றால், அதன் உண்மையான வாழ்வின் கதைகள், ஒரு எழுத்தாளர் கற்பனை செய்யக்கூடியதை விட மிகப்பெரும் அதிர்வை தருபவை, ஆனால் அவை திரையில் எப்போதும் பயன்படுத்தப்படுவதில்லை. ‘Phantom Hospital’ திரைப்படம் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ப்ரீதி ஷஹானி தயாரிப்பில், இதுவரையிலான இந்திய திரையுலகம் கண்டிராத, மிகப்பெரும் அதிர்வை தரும் படைப்பாக இருக்கும் என்றார்.
தனது முதல் இந்தி திரைப்படம் குறித்து இயக்குநர் மகேஷ் நாராயணன் கூறியதாவது…
இந்திய சுகாதாரத் துறையில் நிகழ்ந்துள்ள ஊழல் சம்பவங்களை அடைப்படையாக கொண்டிருக்கும் இக்கதை கேட்டதுமே, என்னை வெகுவாக ஈர்த்தது. ப்ரீதி ஷஹானி ஒரு தயாரிப்பாளராக தரமான திரைப்படங்களை தொடர்ந்து வழங்கிவருகிறார், மற்றும் புலனாய்வு பத்திரிகையாளர் ஜோசி ஜோசப் அவர்களுடைய நுணுக்கமான நிஜத்தை பிரதிபலிக்கும் திரைக்கதையில் இவர்களுடன் இணைந்து, எனது படங்களுக்கு நிறைய அன்பை தரும் இந்தி திரைப்பட பார்வையாளர்களுக்கு, அவர்களின் மொழியில் எனது முதல் இந்திப் படத்தை இயக்க, நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.
Phantom Hospital திரைப்படத்தின் திரைக்கதையை ஆகாஷ் மொஹிமன் மற்றும் மகேஷ் நாராயணன் இணைந்து எழுதியுள்ளனர்.
இயக்குநர் மகேஷ் நாராயணன் குறித்து
சமீபத்திய படமான ‘மாலிக்’ மூலம், இயக்குநர் மகேஷ் நாராயணன் இந்தியாவின் மிகச்சிறந்த நவீனகால கலைஞனாக அனைவராலும் கொண்டாடப்படுகிறார். கதாப்பாத்திரங்களின் மோதல்கள் மற்றும் உணர்ச்சிகள் மூலம் மகேஷின் படங்கள் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தந்து வருகிறது. சம கால நிகழ்வுகளின் மீதான அவரது, மாறுப்பட்ட பார்வை அவரது கதைகளிலும், கதாப்பாத்திரங்களிலும் பிரதிபலிப்பதோடு அவற்றின் உணர்வுப்பூர்வமான பயணத்தில் நம்மை ஈர்த்து, திரையோடு கட்டிப்போட்டுவிடுகிறது. அவரது முதல் திரைப்படமான Take-Off இந்திய மருத்துவ செவிலியர்கள் 2014 ஆம் ஆண்டில் ஈராக் கலவரத்தில் மாட்டிக்கொண்டதை, உணர்வ்ப்பூர்வமாக விவரிக்கும் அட்டகாசமான படைப்பாக அமைந்திருந்தது. இந்திரைப்படம் அவருக்கு உலகளவில் பெரும் அங்கீகாரத்தையும் பல விருதுகளையும் பெற்று தந்தது. மேலும் இந்தியளவிலும் உலகளவிலும் நிறைய திரைவிழாக்களில் கலந்து கொண்டது. அவரது இரண்டாவது திரைபடமான Amazon Original படைப்பான ‘C U SOON’ தனித்த கதைசொல்லல் மற்றும் நேர்த்தியான படைப்பாக பெரும் பாராட்டுக்களை பெற்றது.
மகேஷ் நாராயணன் ஒரு ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக 50 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். வெவ்வேறு மொழிகளில் சமூக சம்பந்தப்பட்ட கதைகளை இயக்கியுள்ளார்.
ப்ரீதி ஷஹானி மற்றும் Tusk Tale Films குறித்து
இந்தியாவின் மிக வெற்றிகரமான திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான ப்ரீதி ஷஹானி, இந்தியாவின் வியத்தகு கதைகளை கூற Tusk Tales Films நிறுவனத்தை நிறுவியுள்ளார். இந்தியாவின் முக்கிய பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ள அவர், இந்திய படைப்புகளை உலகளவில் காட்சிப்படுத்தி வருகிறார். 2014 ல் ஊடக பொழுதுபோக்குதுறையில் உலகின் மிகப்பெரும் முடிசூடா நிறுவனமான Times of India group குழுமத்தின் பிரிவாக Junglee Pictures நிறுவனத்தை உருவாக்கினார். Junglee Pictures மூலம் விமர்சன ரீதியிலும் ரசிகர்களின் பாராட்டுக்களையும் குவித்த, Badhaai Ho, Raazi, Bareilly Ki Barfi, Talvar & Junglee படங்களை தயாரித்துள்ளார்.
Confluence Media மற்றும் ஜோசி ஜோசப் குறித்து
Country’s top journalisam மற்றும் Non-fiction writing விருது பெற்ற ஒரே இந்தியர் ஜோஷி ஜோசப் ஆவார், அவரது புத்தகம் The silent Coup கடந்த வாரம் தான் வெளியானது. அந்த புத்தகம் பதிப்புகள் தீர்ந்து, மீண்டும் பதிப்பு செய்யும் அளவிற்கு, சாதனை செய்து வருகிறது. அவரது முதல் புத்தகம் A Feast of Vultures வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையிலேயே 2017 Crossword Book விருது பெற்றது. 2010 ஆம் ஆண்டு Prem Bhatia Trust இன் India’s Best Journalist வரிசையில் இவரை சேர்த்தனர், மற்றும் Indian Express Group நடத்தும் Ramnath Goenka Foundation லும் இவர் சேர்க்கப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு இவர் Confluence Media நிறுவனத்தை உருவாக்கினார்.