கொரோனா களப்பணியாற்றிய காவலர்களை கவுரவித்த அரிமா சங்கம்

கொரோனா காலத்தில் களப்பணியாற்றிய காவலர்களை நியூ குரோம்பேட்டை அரிமா சங்கம் கவுரவித்து விருதுகள் வழங்கியது.

நியூ குரோம்பேட்டை அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு சேலையூர் சரக காவல்துறை உதவி ஆணையர் முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் அரிமா சங்கத்தின் புதிய தலைவராக கே.என்.குமார் நடராஜன் பதவியேற்றார். அவருக்கு அரிமா சங்க ஆளுநர் பி.எஸ்.வி.குமார், இரண்டாம் துணை நிலை ஆளுநர் வி.பஜேந்திரபாபு ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, அரிமா சங்கத்தின் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு தேசிய திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும், கொரோனா காலத்தில் தன் உயிரையும் துச்சமாக நினைத்து பணியாற்றிய காவலர்களுக்கு விருதுகள் வழங்கி, பொன்னாடை போர்த்தி கவுரவித்தது அரிமா சங்கம்.

இந்த விழாவில் அரிமா அமுதா மதியழகன் மற்றும் நிர்வாகிகள், பள்ளி மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.