பீனிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் கோ.பச்சியப்பன் தயாரித்திருக்கும் படம் ரூபாய்2000. இந்தப் படத்தை ருத்ரன் எழுதி இயக்கியிருக்கிறார். ஏவிஎம்மின் அந்த ‘ நாள் படத்திற்கு பிறகு பாடல்களே இல்லாமல் வெளிவரும் படம் ரூபாய் 2000 இந்தப் படத்திற்கான தணிக்கை சமீபத்தில்நடந்தது படம் பார்த்த தணிக்கை குழுவினர்105 கட்டுகள் கொடுத்தார்கள் இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் ரிவைஷ்கமிட்டிக்கு போனார்கள். காட்சிகளுக்கான காரணங்களை ஆவணமாக கொடுத்து மீண்டும் தணிக்கை செய்யப்பட்டு 24 கட்டுகளுடன் படத்தை வெளியிட அனுமதிப் பெற்றார்கள் ஏவிஎம்மின்
பராசக்தி , வேலைக்காரி, விதிபடத்திற்கு பிறகு சமூக சிந்தனையோடுக்கூடிய வழக்காடுமன்றக் காட்சிகள் இந்தப் படத்தில் அதிகமாக இடம்பெற்றிருக்கிறது நிஜமான சமூக ஆர்வலர்கள் சமூகப் போராளிகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இது அதிகார அத்துமீறலுக்கு எதிரான ஒரு ஏழை விவசாயின் சட்டப்போராட்டம் தான் இந்தப் படத்தின் கதையாக உருவாக்கப்பட்டிருக்கிறது .சொந்த சாதியின் மீதான பற்றினைத் துறப்பதே சாதி ஒழிப்புக்கான முதல்படியாகும் போன்ற கருத்துகளை உள்ளடக்கிய படமாகவும் இதை உருவாக்கியிருக்கிறார்கள்.
இதில் பாரதி கிருஷணகுமார் , ருதரன் பராசு, ஷர்னிகா, அய்யநாதன், தோழர் தியாகு, தோழர் திருமதி ஓவியா, பரியேறும் பெருமாள் கராத்தே வெங்கடேஷ், “பிசைக்காரன், மூர்த்தி, பிர்லா போஸ், கவண் பிரியதர்ஷினி , ரஞ்சன், கற்பகவல்லி, தர்ஷன், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் .
ஒளிப்பதிவை பிரிமூஸ் தாஸ் கவனிக்க, இசையை இனியவன் அமைத்திருக்கிறார். எடிட்டிங் – லட்சுமணன்,
தயாரிப்பு நிர்வாகம்- ராஜ்குமார்,
தயாரிப்பு: கோ.பச்சியப்பன்
எழுத்து- இயக்கம்
ருத்ரன்