‘தமிழ் சினிமா கம்பெனி’ ஏற்பாடு செய்திருந்த ‘சினிமா பற்றிய கலந்துரையாடல்!’

ஏற்கெனவே திரைத்துரையில் இருப்பவர்களும், புதிதாக சினிமாவுக்குள் வரத் துடிப்பவர்களும் சந்தித்துத் தங்கள் கருத்துக்களைப் பகிரவும், சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறவும் இதுவரை வாய்ப்பில்லாமல் இருந்தது.
அந்த நிலையினை மாற்ற கஸாலி மற்றும் தன்வீர் இணைந்து நடத்தும் ‘தமிழ் சினிமா கம்பெனி’ வடபழனி ஜே.பி.டவரில் ஞாயிறுதோறும் இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்கிறது .

இயக்குநர் மற்றும் நடிகர் ஈ.ராம்தாஸ், ஜாகுவார் தங்கம், இயக்குநர் மற்றும் ஔிப்பதிவாளர் ஜீவன், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் திருமலை, ஆச்சார்யா ரவி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட அனுபவசாலிகளும், 90-க்கும் மேற்பட்ட புதியவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் சேர்த்தது திருப்பூர் சுப்ரமணியம் போனில் தன் கருத்தை விபரமாகப் பதிவு செய்தது. மைக் மூலம் அனைவரும் கேட்கும்படி செய்தது அனைவரையும் கவர்ந்தது.
தமிழ் சினிமா கம்பெனியின் புதிய முற்சிகள் பற்றி சுருக்கமாகவும், சுவையாகவும் தன்வீர் விவரித்தார்.
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கஸாலி இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

சுவாரஸ்யமாக நடைபெற்ற நிகழ்ச்சியின் முடிவில் அன்று காலை இயற்கை எய்திய மக்கள் இயக்குநர் ஜனநாதன் அவர்களுக்கு எல்லோரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சி முழுக்க இலவசமாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு இடையில் தேநீர் மற்றும் பிஸ்கட்டும், மதியம் பிரியாணி உணவும் வழங்கப்பட்டது.

வந்திருந்த புதியவர்களில் சிலர் படம் தயாரிப்பைத் தொடங்கப் போவதாகவும், அதற்கு ஆலோசனை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.

இதுபோன்ற சந்திப்புகளால் தேங்கியிருக்கும் சினிமா தயாரிப்பு புத்துணர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டது.