எளிமையின் வலிமை கண்டவர்

அன்பு, உண்மை, புன்னகை, எதார்த்தம், சகோதரத்துவம், மனிதத்தன்மை இவை அனைத்தும் ஒன்றர கலந்தவர் தான் நம் ஆருயிர் அண்ணன் ஜனநாதன். தன் வாழ்நாள் முழுவதும் தன்னை சுற்றி இருந்தவர்களுக்கு அறனாய் இருந்தவர். சிறு கொடுமை கண்டும் கொதித்த சமூக போராளி. தன்னோடு பணி புரிந்த சக படைப்பாளிகளுக்கும் உதவியாளர்களுக்கும் ஒரு கலங்கரை விளக்கமாக வாழ்ந்தவர்.

Edna St. Vincent Millay யின் கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.

‘நான் இருபுறம் எரியும் மெழுகுவர்த்தி
நாளை இருப்பேனா என்று தெரியாது
ஆனால் என் நண்பர்களே
என் எதிரிகளே நான் பேரொளியாக எரிகிறேன்’

என் அன்பு அண்ணா, தூய்மையான இதயத்தின் இருப்பிடமே, நீங்கள் எங்களின் பேரொளி. உங்கள் பாதங்களை என் கண்ணீரால் கழுவி முத்தம் பதிக்கிறேன்.

– மிஷ்கின்