சிபிராஜ் நடிப்பில் உருவாகி, சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ள “கபடதாரி” திரைப்படம், வரும் தைப்பூசம் பண்டிகை திருநாளான 2021, ஜனவரி 28 அன்று வெளியாகிறது. படதயாரிப்பு, பட விளம்பரம் முதலான படம் பற்றின அத்தனை விசயங்களும், ரசிகர்களை கவரும் வகையில் நிகழ்ந்து வருகிறது. சூர்யா முதல் ஏ ஆர் ரஹ்மான் வரை தங்கள் ஆதரவு கரம் நீட்டி வெளியிட்ட பட புரமோக்களும், அனைவரையும் கவர்ந்திழுத்திருக்கும் விஷுவல்களும், “கபடதாரி” படத்தினை இக்காலகட்டத்தின் மிக முக்கிய படைப்பாக மாற்றியிருக்கிறது. பொதுவாக ரிமேக் படங்கள் மீது பலத்த எதிர்பார்ப்பும், பல நேரங்களில் முதல் படத்துடன் பெரும் ஒப்பிடலும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். தமிழில் “கபடதாரி” நிறைய மாற்றங்களை அடைந்துள்ளது “காவலுதாரி” பார்த்த ரசிகர்களுக்கும் இப்படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.
இதில் குறிப்பிடதகுந்த அம்சம் என்னவெனில் ஒரிஜினல் படத்தின் இயக்குநரும் திரைக்கதை ஆசிரியருமான ஹேமந்த் ராவ் தமிழ்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் முழுதாக பங்கு கொண்டுள்ளார். அவரது பார்வையில், தமிழுக்கேற்ற முழுமையான மாற்றங்களை, திரைக்கதையிலும், வசனங்களிலும் ஏற்படுத்தியதில் பெரும் பங்காற்றியுள்ளார். தமிழ் பதிப்பின் திரைக்கதை அமைப்பை கிரியேட்டிவ் புரடியூசர் G.தனஞ்செயன் அமைத்துள்ளார். அவர் தான் இயக்குநர் ஹேமந்த் ராவ் அவர்களை அழைத்து, அவர் உதவியுடனும், தமிழ்ப்பதிப்பின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி மற்றும் எழுத்தாளர் ஜான் மகேந்திரடனும் இணைந்து திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார். தமிழ் பதிப்பின் திரைக்கதை ஒரு குழுவாக, அனைவரது பங்களிப்புலும் மிக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
Creative Entertainers & Distributors சார்பில் லலிதா தனஞ்செயன் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தினை இயக்கியுள்ளார். நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயப்பிரகாஷ் ஆகியோருடன் மற்றும் பலர் வெகு முக்கிய கதாப்பாத்திரத்திங்களில் நடித்துள்ளனர்.