சினிமாவை காப்பாற்ற இப்போதைக்கு இதுதான் ஒரே வழி என சியான்கள் படத்தயாரிப்பாளர் கரிகாலன் கோரிக்கை ஒன்றை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
Actor Karikalan Request Video : தமிழ் சினிமாவில் வயதான 5 முதியோர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தான் சியான்கள். நாளை முதல் தமிழகம் முழுவதும் வெளியாக உள்ள இந்தத் திரைப்படத்தை கே எல் கரிகாலன் என்பவர் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ளார். வைகர பாலன் என்பவர் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
நாளை படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான கரிகாலன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அரசாங்கம் நாம கொரானாவில் இருந்து மீண்டு வந்து விட்டோம் என சொல்லும் வகையில் தான் பஸ், ட்ரெயின், ஒயின் ஷாப் உள்ளிட்டவைகளை ஒவ்வொன்றாக திறந்து வருகிறார்கள். அரசாங்கத்தை நடத்த இதெல்லாம் தேவை என்பதால் தற்போது திறந்து உள்ளார்கள்.
அதைப்போல் ஒரு நகை கடைக்காரர் இருக்கிறார் என்றால் அவர் தன்னுடைய தொழிலை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கடைக்கு வர வைக்கிறார்.
இப்படியான நிலையில் தற்போது கரிகாலன் அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் சினிமாவை காப்பாற்றிக்கொள்ள தற்போது சினிமாக்காரர்கள் தான் முடியும். நம்மோட சினிமாவை காப்பாற்றிக்கொள்ள நாம என்ன செய்துள்ளோம் என்பதை யோசித்துப் பாருங்கள்.
முதலில் சினிமாவில் உள்ள லைட்மேன் உட்பட அனைவரும் அவர்கள் குடும்பத்தில் அழைத்துக்கொண்டு தியேட்டரில் படம் பாருங்கள். அப்போதுதான் மக்கள் மத்தியிலும் ஒரு விழிப்புணர்வு ஏற்படும். மக்களும் அப்போதுதான் திரையரங்குகளுக்கு வருவார்கள் என பேசியுள்ளார்.
I like to thank TN Government for re-opening cinema halls. @CMOTamilNadu#SaveCinema
I request all technicians & crew to watch the Movie in theatre and create awareness among the people.#Chiyangal from tomorrow in cinemas.https://t.co/hNURMqGHjK pic.twitter.com/xCREpmIqdT
— Karikalan KL (@KarikalanKl) December 24, 2020