சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகரும் ,சித்த மருத்துவருமான வீரபாபு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை சாலிகிராமத்தில் பத்து ரூபாய் விலையில் தினந்தோறும் சிகிச்சை அளித்து வந்தவர் . ஒரு உயிரிழப்பும் இன்றி இவர் இதுவரைக்கும் 5394 க்கும் மேற்பட்டவர்களை முழுவதுமாக குணப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்று சென்னை சாலிகிராமத்தில் உழைப்பாளி மருத்துவமனை என்ற ஒன்றை தொடங்கியுள்ளார் . மருத்துவமனை கட்டிட்ட வேலைபார்த்த கூலித்தொழிலாயியை வைத்து திறந்து ,10 ரூபாய் மட்டுமே மருத்துவக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
உழைப்பாளி மருத்துவமனை குறித்து வீரபாபு கூறியவை :
” ஏற்கனவே 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் விதமாக உழைப்பாளி உணவகம் செயல்பட்டு வருகிறது .ஏழை மக்களுக்காக இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது . ரூ.10 கட்டணமாக வசூல் செய்யப்பட உள்ள இந்த மருத்துவமனையில் சித்த மருத்துவத்துடன், அலோபதி சிகிச்சையும் , ஆங்கில மருத்துவமும் கூடிய ஒருங்கிணைந்த சிகிச்சை முறையை அதே கட்டணத்துக்கு வழங்கப்பட உள்ளது. 5 ஆங்கில மருத்துவர்களும் , இரண்டு சித்த மருத்துவர்களும் சிகிச்சை அளிக்க இருக்கிறோம் .” இவ்வாறு தெரிவித்துள்ளார் .