ஒற்றை காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலி – யானை தாக்கியதில் கடந்த 4 நாட்களில் 3 பேர் உயிரிழப்பு

ஒசூர் அருகேயுள்ள ஆப்ரி கிராமத்தை சேர்ந்த முதியவர் முனுசாமி, காட்டுப்பகுதியில் உள்ள கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது ஒற்றை யானை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரது உறவினர்களுடன் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். கடந்த நான்கு நாட்களில் அடுத்தடுத்து மூன்றுபேர் காட்டுயானை தாக்கி உயிரிழந்திருப்பது கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.