விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி வழிப்பறி – பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

விழுப்புரம் மாவட்டம் கொடுக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த அலமேலுவின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், அலமேலுவின் மகன் கஞ்சா வழக்கில் மாட்டிக்கொண்டு விட்டதாகவும், விசாரணைக்கு வருமாறும் கூறி அவரை அழைத்து சென்றுள்ளார். பின்னர் நடுவழியில் கத்தி கொண்டு அலமேலுவை கிழித்து விட்டு, அவர் அணிந்திருந்த தங்க செயின் மற்றும் தாலியை பறித்துச் சென்றுள்ளார். தற்போது மீட்கப்பட்ட அலமேலு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.