“தாய்நிலம்” திரைப்படம் காஸ்மோஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது…
நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் விருது விழாவில் ஆன்லைனில் திரையிடப்பட்டன.
அதில் “தாய்நிலம்” திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும் சிறந்த அறிமுக இயக்குநர் விருதும் பெற்றது குறிப்பிடத்தக்கது..
சிறந்த ஒளிப்பதிவாளராக “தாய்நிலம்” திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு பிரசாந்த் பிரணவமும், சிறந்த அறிமுக இயக்குநர் விருதை இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.
முதன்முதலில் இருவரும் சேர்ந்து பணியாற்றிய திரைப்படத்திற்கு விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி என இருவரும் கூறினார்..
அதைவிட இலங்கை தமிழ் மக்களின் வலியும் வாழ்க்கையும் படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனின் மனதையும் தொடும் அளவில் செதுக்கப்பட்டதன் பலன் தான் இந்த விருதுகள் என்றும்…
இந்த விருதை இலங்கையில் அனைத்தையும் இழந்து, அநாதைகள் ஆக்கப்பட்டு, தெருவில் முகவரி இன்றி வாழும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இதை சமர்ப்பிப்பதாக இயக்குநர் அபிலாஷும், ஒளிப்பதிவாளர் பிரசாந்தும், தயாரிப்பாளர் அமர் ராமச்சந்திரனும் கூறினார்.
டாக்டர் அமர் இராமச்சந்திரன் தயாரிப்பில் உருவான “தாய்நிலம்” திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் தேர்தெடுக்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா திரை அரங்குகள் மீண்டும் திறந்தவுடன் திரைக்கு வரக் காத்திருக்கிறது.
“தாய்நிலம்” திரைப்படம்
அவுசெப்பச்சன் இசையில், கவிஞர் பழனி பாரதி, தாமரை எழுதிய பாடல்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.