‘எம்எம்ஹெச்ஆர்சி கன்சல்ட்’ சேவையை அறிமுகம் செய்திருக்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை

 

தங்களது வீடுகளில் வசதியாக இருந்துகொண்டே மருத்துவ சிகிச்சை ஆலோசனையை நோயாளிகள் பெறுவதற்கான ‘எம்எம்ஹெச்ஆர்சி கன்சல்ட்’ என்ற தனிச்சிறப்பான வீடியோ சேவையானது மீனாட்சிமிஷன் மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையத்தால் தொடங்கப்பட்டிருக்கிறது

· நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் முழுமையான ஊரடங்கு காலகட்டத்தில் உடல்நல பராமரிப்பிற்கான ஆலோசனையை வழங்க தொடங்கப்பட்டிருக்கும் இத்திட்டத்தில் அனுபவம் மிக்க மருத்துவர்கள் காலை 8 மணியிலிருந்து, இரவு 8 மணி வரை நிபுணத்துவம் மிக்க மருத்துவ ஆலோசனையை வழங்குவார்கள்.

மதுரை / மார்ச் 30, 2020: வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே தங்கியிருக்குமாறு அனைத்து மக்களும் கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டிருக்கின்ற முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நடப்பு சூழலைக் கருத்தில்கொண்டு “எம்எம்ஆர்ஹெச்சி கன்சல்ட்” என்ற தனித்துவமான வீடியோ (காணொளி) கலந்தாலோசனை சேவையை மீனாட்சிமிஷன் மருத்துவமனை (MMHRC) தொடங்கியிருக்கிறது. மருத்துவமனைக்கு நேரில் வராமலேயே தங்களது வீட்டில் இருந்துகொண்டே அனுபவம் மிக்க மருத்துவர்களின் ஆலோசனையையும், மருத்துவ உதவியையும் நோயாளிகள் பெறுவதற்கு இதன்மூலம் வகைசெய்யப்பட்டிருக்கிறது.

தங்களது வீடுகளில் சௌகரியமாக இருந்துகொண்டே மருத்துவ நிபுணர்களை நோயாளிகள் கலந்தாலோசித்து சிகிச்சைக்கான உதவியை பெறுவதற்காக இந்த “டெலிஹெல்த்” சேவையை எம்எம்ஹெச்ஆர்சி கன்சல்ட் என்ற பெயரில் மீனாட்சிமிஷன் மருத்துவமனை அறிமுகம் செய்திருக்கிறது. www.mmhrc.com என்ற வலைதளத்தில் லாக்ஆன் செய்து, ‘வீடியோ கன்சல்டேஷன்’ என்ற விருப்பத்தேர்வின் மீது க்ளிக் செய்து, அவர்கள் விரும்புகின்ற மருத்துவரிடம் நோயாளிகள் எளிதாக தொடர்புகொள்ளலாம். கலந்தாலோசனை மற்றும் மருத்துவ ஆலோசனையை வழங்குவதற்காக இச்சேவை திட்டத்தின் கீழ் அனுபவம் மிக்க மருத்துவர்கள் காலை 8.00 மணி முதல், இரவு 8.00 மணி வரை பணியாற்றுவார்கள். நோயாளிகள் தெரிவிக்கின்ற நோய் அறிகுறிகளை புரிந்துகொள்வதன் மூலம் பிரச்சனை மற்றும் நோய்கள் என்ன என்று மருத்துவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய பொதுவான சுகவீனங்களினால் அவதிப்படுகின்ற நபர்களுக்கு இச்சேவை பயனுள்ளதாக இருக்கும். அதன்பிறகு நோய் பாதிப்புகளுக்குரிய மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள் அல்லது மேற்கொள்ளக்கூடிய பல்வேறு சிகிச்சை முறைகள் பற்றிய ஆலோசனையை வழங்குவார்கள்.

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர். குருசங்கர் இதுகுறித்து பேசுகையில், “தீவிரமான உடல்நல பிரச்சனைகளை அடையாளம் காணவும், மேலதிக சிகிச்சைகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்குவதிலும் டெலிஹெல்த் சேவைகள் சிறப்பாக உதவக்கூடும். தங்களது வீட்டில் இருந்துகொண்டே சுகாதார பராமரிப்பு நிபுணர்களிடம் விரைவாக காலந்தாலோசனையைப் பெறுவதற்கு நோயாளிகளுக்கு மிகப்பெரிய அளவில் ஆதாயமளிப்பதாகவும் இச்சேவை இருக்கிறது,” என்று கூறினார்.

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ நிர்வாகி – இயக்கம் – டாக்டர். கண்ணன் அவர்கள் பேசுகையில், “நோயாளி நலனை மையமாக கொண்ட எமது இந்த அணுகுமுறை, இத்தகைய காலகட்டங்களில் நோயாளிகளை எமது சேவைகள் சென்றடைவதற்கு உதவுவதோடு, மெய்நிகர் அடிப்படையில் தரமான நோயாளி பராமரிப்பு சேவையை வழங்குவதற்கும் உதவிகரமாக இருக்கும். தங்களது நோய் பாதிப்புகள் குறித்த அவசரமான ஆலோசனைகள் பற்றியும் தங்களது சிகிச்சைக்கான விருப்பத்தேர்வுகள் பற்றி சில நிமிடங்களுக்குள்ளே அறிந்துகொள்ளவும் இச்சேவை நோயாளிகளுக்கு வாய்ப்பளிக்கிறது. அனுபவம் மிக்க மருத்துவ நிபுணர்களிடம் தங்களது பிரச்சனைகள் குறித்து வீட்டிலிருந்தவாறே எடுத்துக்கூறி உரிய மருத்துவ ஆலோசனையை பெறுவதற்கு இச்சேவை திட்டம் உதவுகிறது,” என்று கூறினார்.

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பொது மேலாளர் இயக்கம் – டாக்டர். ஜே. ஆதில் பேசுகையில், “கூகுள் பே ஸ்டோர் மற்றும் ஐஸ்டோர் ஆகிய இரண்டிலும் பதிவிறக்கம் செய்யக்கூடிய ஒரு மொபைல் செயலியாகவும் இது கிடைக்கிறது. எம்எம்ஹெச்ஆர்சி கன்சல்ட் என்ற இது, உங்களது ஸ்மார்ட்போனை பயன்படுத்தியே பெறக்கூடிய டெலிஹெல்த் சேவையை வழங்குகிறது. தங்களது வசிப்பிடங்களுக்கு அருகே உடனடியாக மருத்துவமனைகளுக்கான அணுகுவசதி இல்லாதவாறு தொலைதூரங்களில் வசிக்கின்ற நபர்களுக்கும் மருத்துவ ஆலோசனை கிடைப்பதை இச்சேவை எளிதாக்கும். எனினும், அவசரநிலை நேர்வுகளில், முடிந்தவரை விரைவாக அருகிலுள்ள ஒரு மருத்துவர் அல்லது ஒரு மருத்துவமனையை இத்தகைய நோயாளிகள் சென்றடையுமாறு அறிவுறுத்தப்படுகிறது. என்று கூறினார்.