சமீப நாட்களாக COVID 19 எனப்படும் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது. இந்த கொடிய நோயை கட்டுப்படுத்த ஒவ்வொரு குடிமகனும் இதனை கடை பிடித்தால் மட்டுமே இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ளை நாட்டை காக்க முடியும் என்பது பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது.
அனைத்து வணிக / வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதால் நாட்டின் பல்வேறு துறை பெரும் சரிவை சந்தித்துள்ளது. இது தவிர்க்க முடியாத நிலை என்றாலும் கூட இவ்வாறு பொருளாதார சரிவை எதிர்கொள்ளும் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு அரசு கை கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் TEMOWA எனப்படும் TamilNadu Earth Moving Equipments Owners Welfare Association சங்கத்தினர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த சங்கத்தின் தலைவர் திரு. கத்திப்பாரா ஜனார்த்தனன் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில், அனைத்து கட்டுமான இயந்திரங்கள் மற்றும் லாரிகளுக்கு, மாதாந்திர கடன் தவணை 3 மாத காலத்திற்கு விளக்கு அளிக்குமாறு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Covid -19 தாக்கம் காரணமாக, அனைத்து உள்கட்டமைப்பு, கட்டுமான துறை வேலைகளும் தடைஏற்பட்டுவிட்டது. கரோனா பாதிப்பு குறித்த நெருக்கடி, ஊரடங்கு உத்தரவு மற்றும் கட்டுமான தொழில் மந்தநிலை போன்ற பல்வேறு காரணங்களால், பெரும் பாதிப்பினை தாங்கள் சந்தித்திருப்பதாகவும் இதனால் மாதாந்திர கடன் தவணை மற்றும் EMI,செலுத்துவதில் சிரமம் இருக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற (COVID19) நெருக்கடி நிலைமைக்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு மற்றும் நிதி அமைச்சகத்தை நாங்கள் வரவேற்கிறோம். இத்தகைய கடினமான சூழ்நிலையை கருத்தில் எடுத்துக்கொண்டு. EMIக்கள், மாதாந்திர தவணைகள் மற்றும் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு 3 மாத கால தடை அறிவிக்க கேட்டுக்கொள்கிறோம்.
எவ்வித வருமானமும் இல்லாமல் வாங்கி கடனை கட்ட வேண்டிய சூழல் ஏற்படுமாயின் உள்கட்டமைப்புத் தொழில் காலத்திற்கும் சரிசெய்ய முடியாத சேதத்தை சந்திக்கும் அபாய நிலை நிலவுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது..
இந்த கடினமான நேரத்தில் இந்தத் துறைக்கு நிவாரணம் வழங்குமாறு மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் தமிழகத்தின் வாகன உரிமையாளர்கள் சார்பாக கோரிக்கை மனுவாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கடிதத்திற்கு நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வாங்கி எந்த வித நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இது போல ஒவ்வொரு துறையும் பொருளாதார சவாலை எதிர்கொண்டால் நாட்டின் நிதிநிலை மற்றும் பொருளாதாரத்தில் மிக பெரிய தாக்கம் ஏற்பட கூடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மாதாந்திர கடன் செலுத்தி வரும் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நிலையம் கேள்வி குறியாகவே உள்ளது.