சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி , யோகிபாபு , ஆத்மியா நடிப்பில் உருவாகிவரும் “வெள்ளையானை” படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைக்கிறார் .மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S .வினோத் குமார் தயாரிக்கிறார் .
முழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப்படமான இந்த படத்தில் E .ராமதாஸ் , மூர்த்தி ( இயக்குனர் ) ,SS ஸ்டான்லி ,பாவா செல்லதுரை ,’சாலை ஓரம் ‘ ராஜு , சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர் .
தற்போது இந்த படத்திலிருந்து ” வெண்ணிலா “ எனும் முதல் பாடலை நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் .உமா தேவி பாடல் வரிகளை எழுதியுள்ளார் . சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார் . விஜய் நரேன் & சங்கீதா கருப்பாயா ஆகியோர் பாடியுள்ளனர் .
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது . விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
தொழில்நுட்பக்குழு :
எழுத்து -இயக்கம் : சுப்ரமணியம் சிவா
தயாரிப்பு – S .வினோத்குமார் -மினி ஸ்டூடியோ
இசை – சந்தோஷ் நாராயணன்
கலை இயக்கம் – ஆ .ஜெகதீசன்
ஒளிப்பதிவு – விஷ்ணு ரங்கசாமி
சண்டைப்பயிற்சி -தினேஷ் சுப்பராயன்
ஆடை வடிவமைப்பு – நாகு
மேக்கப் – A .சரவணகுமார் , B. ராஜா
பாடல்கள் – இயக்குனர் ராஜு முருகன் , உமா தேவி , அறிவு , அந்தோனி தாசன்
விளம்பர வடிவமைப்புகள் – சசி & சசி, மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மது