இன்றைய போட்டிகள் நிறைந்த வேகமான உலகில் டீனேஜ், காலேஜ், மேரேஜ், மிடிலேஜ் என பதினெட்டு வயதிலிருந்து எண்பது வரையிலான பெண்கள் சிம்பிளாகவும் இருக்கவேண்டும். கம்பர்ட்டபிளாகவும் இருக்கவேண்டும். அட்ராக்டீவ்வாகவும் இருக்கவேண்டும். இப்படியிருக்கும் டிரஸ்களைத்தான் தேர்வு செய்துஅணிகிறார்கள். அதற்கு தான் முக்கியத்துவமும் கொடுக்கிறார்கள். உடைகளைப் பொருத்தவரை ‘ஆள் பாதி ஆடை பாதி’ என்பது சென்ற தலைமுறையினரின் ஃபேஷன் ஸ்லோகம். இந்தத் தலைமுறையினரோ ‘ ஃபேஷன் பாதி குவாலிட்டி மீதி’ என்கிறார்கள். ஆடை அலங்காரத்திற்கான அவர்களின் இந்த புதிய தாரக மந்திரத்தை, தங்களுடைய கொள்கையாகக் கொண்டு, சென்னையில் இயங்கி வருகிறது எகைக்கா.
‘எகைக்கா’(https://www.ekaika.net/) என்ற சொல்லே வித்தியாசமானதைப்போல், அங்கு கிடைக்கும் ஆடைகளும், உடைகளும் வித்தியாசமானதாகவேயிருக்கிறது. கண்ணைக்கவரும் கலவையான வண்ணங்களில், நவீன டிசைன்களில் வேறு எங்கும் கிடைக்காத வகையில் இங்கு டிரஸ் மெட்டீரியல்கள் குவிந்திருக்கிறது.
இது குறித்து இந்நிறுவனத்தின் உரிமையானரான திருமதி சங்கீதா நாராயணன் பேசுகையில்,“ சாதாரண குடும்ப பின்னணியைக்கொண்ட எனக்கு, கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக சிறிய அளவில் சேலைகள், ரவிக்கைகள் மற்றும் பெண்களுக்கு தேவையான உடைகளை விற்பனை செய்தேன். என்னுடைய சேவையின் மூலம் நூற்றுக்கணக்கான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களைப் பெற்றேன். அவர்களின் ஆதரவால் ‘எகைக்கா’ என்ற பெண்களுக்காக பிரத்யேக ஆடைகள் உலகத்தைத் தொடங்கினேன்.
எகைக்கா என்றால் யூனிக்கானது என்று பொருள். இந்த பெயருக்கேற்றவாறு என்னுடைய தொடர் தேடலில் வித்தியாசமான டிசைன்களில் டிரஸ் மெட்டீரியல்களை சேகரித்து, காட்சிப்படுத்தினேன். வாடிக்கையாளர்களின் எண்ணத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் தள்ளுபடி விலையில் தரமான ஆடைகளை விற்பனை செய்கிறேன்.
இங்கு காட்டன் புடவைகள், பட்டுப் புடவைகள்,சுரிதார்கள், ரவிக்கை என பெண்களின் ஆடை அணிகலன் தேவைகளை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விற்பனை செய்கிறோம். ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறோம் .எங்களிடம் வேறு எங்கும் கிடைக்காத டிசைன்கள் மற்றும் டிசைனர் சாரீஸ் மற்றும் சுரிதார் மெட்டீரியல்ஸ் இருக்கிறது.
எங்களது விற்பனையை வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப இணையதளத்திலும் கிடைக்கிறது. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள ஊடகங்களின் மூலமாகவும் உங்களது தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்கிறோம்.
ஆன்லைன் ஆர்டர்களுக்கு நாங்கள் ஜிஎஸ்டி மற்றும் கூரியர் செலவுகளையும் நாங்கள் ஏற்கிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விரைவான சேவை கிடைப்பதை உறுதி செய்கிறோம்.
ஒரு முறை ‘எகைக்கா’(EKAIKA)விற்கு வருகை தந்தால், உங்களது உடை அலங்காரத்தில் மூலமான தோற்றப் பொலிவு மேலும் மெருகேறும் என்பது உறுதி.” என்றார்.
இங்கு ரவிக்கைகளுக்கான ஆரி ஒர்க், பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கான் சீருடை மற்றும் தையல் தொடர்பான அனைத்து சேவைகளும் குறைந்த மற்றும் நியாயமான கட்டணத்தில் வழங்குகிறோம். மேலும் இங்கு ஸ்போக்கன் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பெர்சோனாலிட்டி டெவெலப்மென்ட் (Personality Development)கற்று தருகிறோம்.
தொடர்புக்கு : 8939881582 (Email : ekaikasangeetha@gmail.com)