அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகை சென்னை கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள அன்னை பாத்திமா ஆலயத்தில் நடைபெற்றது. அங்குள்ள கருணை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சி கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்ற விழா. பங்கேற்ற முதல்வரும், துணை முதல்வரும் இந்து சமுதாயத்தை சார்ந்தவர்கள். நிகழ்ச்சிக்கு கொண்டுவரப்பட்ட கேக் ஒரு இஸ்லாமிய பெண்மணியின் வீட்டில் தயாரிக்கப்பட்டு எடுத்துவரப்பட்டதாகும்.இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கரின் மனைவி ஹமீதாபானு அபு தனது வீட்டில் கேக் தயாரித்து இந்த நிகழ்ச்சிக்காக கொடுத்து அனுப்பியுள்ளார். பிரிவினைகளுக்கு இடம் கொடுக்காமல் இந்து,இஸ்லாம், கிறிஸ்தவம் என மும் மதமும் சங்கமிக்கும் நிகழ்ச்சியாக முதல்வர் கலந்து கொண்ட கிறிஸ்துமஸ் விழா அமைந்திருந்தது. மதங்களால் மனிதன் பிளவுபட்டு போய்விடக்கூடாது என்ற சிந்தனை மேலோங்கி நிற்க வேண்டிய காலகட்டம் இது. எனவே தமிழகம் எப்போதும் பிரிவினைகளுக்கு இடம் கொடுக்காமல் அமைதி, அன்பு ஓங்கி நிற்கும் மாநிலமாக அமைதிப் பூங்காவாக எப்போதும் திகழும் என்பதற்கு இந்த நிகழ்வே மிகப்பெரிய சான்றாக அமைந்திருந்தது.