மூன்றாம் உலகத் தமிழ் தொழில் அதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு சென்னை மகளிர் கிறித்துவக் கல்லூரி வளாகத்தில்  தொடங்கியது

மூன்றாம் உலகத் தமிழ் தொழில் அதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு சென்னை மகளிர் கிறித்துவக் கல்லூரி வளாகத்தில் இன்று (நவம்பர் 14 )இனிதே தொடங்கியது .35 நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேலான பல்துறை தமிழ் தொழில் அதிபர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். எழுமின் அமைப்பு நடத்திய முதல் உலகத் தமிழ் தொழில் அதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரையிலும் இரண்டாம் மாநாடு மலேசியாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. காலை 7.30 மணிக்கு மாநாட்டில் கலந்துகொள்ள விரும்புபவர்களுக்கான பதிவு தொடங்கப்பட்டது.. பலரும் ஆர்வமுடன் இந்த மாநாட்டில் பங்குபெற பதிவு செய்தனர்… மியான்மர் ஆப்பிரிக்கா கனடா சிங்கப்பூர் வளைகுடா நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள்,மற்றும் திருமதி லதா பாண்டியராஜன், வழக்கறிஞர் கனிமொழி மதி, ஆனந்த கோமதி, எழிலரசி ,நந்தினி ஆகியோரால் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு இம்மாநாடு இனிதே தொடங்கியது.
மகளிர் கிறித்துவக் கல்லூரியின் முதல்வர்   லிலியன் ஜாஸ்பர் நிகழ்த்தினார்… தமிழ்ச் சமூகத்தின் மாபெரும் கனவு என்ற தலைப்பில் முன்னாள் தலைமைச் செயலாளர் திரு தேவ சகாயம் ஐஏஎஸ் அவர்கள் உரையாற்றினார்… பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் (முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் -ஒடிசா) அவர்கள் “சிந்துவெளி முதல் கீழடிவரை துணைக்கண்ட பெருவழியில் காலம் வளர்த்த  வணிகத்தமிழ் “என்ற தலைப்பில் சிறப்பாகப் பேசினார்.. சென்னையில் காணப்படுகிற நல்லிணக்கம் பற்றி ஆற்காடு இளவரசர் முகம்மது  அசீப் அலியும் ,,,ஆரோக்கிய வாழ்வின் தேவையும் தொழில்  முனைவோருக்கு அதன் அவசியமும் என்ற தலைப்பில் மருத்துவர் கு சிவராமனும் சிறப்புரையாற்றினார்கள். திரு கார்த்திகேயன்- மலேசியா மற்றும் சக்திவேல் (-தலைவர் இந்தோ அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு) இந்த நிகழ்வை இனிதே தொடங்கி வைத்தனர்.
“உலகத்தமிழர்களின் உறவுகள்- அரவணைப்புகள்” குறித்து  தி ரைஸ் அமைப்பின் நிறுவனர் திரு ஜெகத் கஸ்பர்  சிறப்புரையாற்றினார் …அதன் பின்பு பணம், முதலீடு, வங்கி எதிர்காலம், சித்தா ,ஆயுர்வேதா, யோகா ,போன்ற தலைப்புகளில் சிறப்பு அமர்வுகள் நடைபெற்றன… பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன். சொக்கலிங்கம் (முதலீட்டு நிபுணர்- துபாய் ) மோகன் குமாரமங்கலம் தலைமை ஏற்று இந்த அமர்வுகளை வழிநடத்தினர்… லாஜிஸ்டிக்ஸ் குறித்தும் சிறப்பு அமர்வுகள் ஒழுங்கு படுத்தப்பட்டன…. திரு கிருஷ்ணன்  தலைமையில் இந்த சிறப்பு அமர்வு நடைபெற்றது… உலகச் சந்தையில் தமிழர் உணவின் எதிர்காலம் குறித்து சிறப்பு அமர்வு நடைபெற்றது இதற்கு மருத்துவர் கு சிவராமன் தலைமையேற்று வழிநடத்தினார்… ஏற்றுமதி இறக்குமதி குறித்து ஆல்பர்ட் பெர்க்மன்ஸ் தலைமையிலும் சிறப்பு அமர்வுகள் நடைபெற்றன 21 நூற்றாண்டில் கல்வியின் எதிர்காலம் குறித்தும் சிறப்பு அமர்வுகள் நடைபெற்றது.இந்த அமர்வில் பல கல்வியாளர்களும் பல கல்விசார் துறை நிபுணர்களும் கலந்து கொண்டனர்
3 நாள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல்நாள் நிகழ்வு இனிதே முடிவுற்றது… மாநாட்டின் இரண்டாம் நாளில் தொழில் முனைவோருக்கான பல சிறப்பு அமர்வுகள், தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல்கள், பல வெளிநாட்டு தொழில் அதிபர்கள் பங்கேற்கும் ஆலோசனை அமர்வுகளும் ஒழுங்கு படுத்தப் பட்டுள்ளன என தெரிவித்தார் தி ரைஸ் அமைப்பின் நிறுவனர் திரு ஜெகத் கஸ்பர்..
பொருளாதார வல்லுனர்கள் கலந்து கொண்ட நிதி நிர்வாகம் தொடர்பான உரை அரங்குகள் / உலகின் பல நாடுகளிலும் இருந்து வருகை புரிந்த ஏற்றுமதி /  இறக்குமதி நிபுணர்கள் உரையாற்றிய வணிக அரங்குகள் / மேலும் பல்வேறு நாடுகளில் உள்ள தொழில் வாய்ப்புகள் பரிமாறிக் கொள்ளுதல் என தொழில் சார்ந்த அறிவுசார் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
பங்கேற்பாளர்களுக்கு மரபு உணவுகள் வழங்கப்பட்டது.